ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம்..! | Raja Raja Cholan Birth Natchathiram in Tamil

Advertisement

Raja Raja Cholan Birth Natchathiram in Tamil

ராஜராஜ சோழன், சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவர் பொதுக்காலம் 985 முதல் 1014 வரை ஆட்சி செய்தார். இவர் ஆட்சி செய்த காலம் ஆனது, சோழர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இவரது உண்மையான பெயர் அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, இவர் ஆட்சி செய்த காலத்த்தில் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன. அதில் முக்கியமாகவும் பெரிய கோவிலாகவும் விளங்குவது தஞ்சை பெரியகோவில் தான். ஒவ்வொரு ஆண்டும், ராஜராஜ சோழன் பிறந்த தினத்தன்று தஞ்சை பெரியகோவிலில் சதய விழா நடைபெறும்.

எனவே, இதனை சிறப்புகளை உடைய ராஜராஜ சோழன் அவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் | Raja Raja Cholan Rasi Natchathiram

ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம்

ராஜராஜ சோழன் அவர்கள் 27 நட்சத்திரங்களில் 24-வது நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆகவே, ராஜராஜ சோழன் ஜென்ம நட்சத்திரம் சதய நட்சத்திரம் ஆகும். இவர், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் வரும் நாளில் சதய விழா மிக விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது.

அதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரம்..!

சதய நட்சத்திரம் குணாயதிசங்கள்:

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் விரும்பப்படும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

எப்போதும் அன்பிற்கு அடிமையாக இருப்பார்கள்.

ஆன்மிகத்தில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்களாக இருப்பார்கள்.

உயர்ந்த லட்சியத்தை அடைய எப்போதும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

மேலும், இவர்கள் கடல் கடந்து பயணம் செய்வதை அதிகம் விரும்புவர்களாக இருப்பார்கள்.

முக்கியமாக, இவர்கள் எல்லாவற்றிலும் சட்டதிட்டங்களுடன் நடந்து கொள்வார்கள்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடன்பிறப்புகளுடன் மிகுந்த பாசம் காட்டுவார்கள்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். மேலும், இவர்கள் அதிக பேச்சாற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

சதய விழா என்றால் என்ன.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement