ராஜாஜி எழுதிய நூல்கள்…

Advertisement

ராஜாஜி எழுதிய நூல்கள்

தமிழில் எண்ணில் அடங்காத புத்தகம் உள்ளன. சங்க இலக்கியங்களில் ஆரம்பித்து இப்போதைய ஹைக்கூ கவிதை வரை நமது எழுத்தாளர்களும் கவிஞர்களும் அத்தனை புத்தகங்களை எழுதியுள்ளனர். இவர்கள் மட்டும் அல்லாது சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள் வரை தமிழை போற்றும் விதமாகவும் நாம் பண்பாட்டை விளக்கும் விதமாகவும் பல படைப்புகளை படைத்துள்ளனர். இந்த படைப்புகள் எல்லாம் நமக்கு பல தகவல்களை சொல்லுகிறது.

“புத்துலகம் படைக்க புத்தகம் படைப்போம்” என்கிறார் அப்துல் கலாம் அவர்கள். புதிய சிறந்த உலகம் ஒன்று படைக்கப்பட வேண்டுமாயின் அதற்கு மிகச் சிறந்த புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒருவரின் நடத்தைகளும் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும் சாதனமாகிய புத்தகங்கள் அனைவராலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அந்தவகையில் இன்று நாம், மக்களால் ராஜாஜி என்று அறியப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதிய புத்தகங்களை பற்றி தெரிந்துக்கொண்டு புத்தகங்களை படித்து பயன்பெறுவோம் பாதுகாப்போம் வாருங்கள்..

ராஜாஜி எழுதிய நூல்கள்:

சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி, காந்தி பக்தர், காங்கிரஸ் அபிமானி, அரசியல் கட்சி தலைவர் இதுமட்டும் அல்லாது ஒரு சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் ராஜாஜி என்றழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி  மொழிகளில் சிறந்த எழுத்தாளராக விளங்கினார். தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் ஒருவர். ராமாயணக் கதையைக் குழந்தைகளும் புரியும் வகையில் அவர் எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்துக்கு 1958-ல் சாகித்ய விருது கிடைத்தது.

Rajaji Books in Tamil:

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்காற்றியுள்ளார். வடமொழி நூல்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புகழ்பெற்ற இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் எழுதிய பாடலே..

தமிழில் ராஜாஜி எழுதிய நூல்கள்:

  1. திண்ணை ரசாயனம்
  2. சக்கரவர்த்தித் திருமகன் (சாகித்திய அகாதமி விருது)
  3. வியாசர் விருந்து
  4. கண்ணன் காட்டிய வழி
  5. பஜகோவிந்தம்
  6. கைவிளக்கு
  7. உபநிஷதப் பலகணி
  8. ரகுபதி ராகவ
  9. முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
  10. திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
  11. மெய்ப்பொருள்
  12. பக்திநெறி, வானதி பதிப்பகம், சென்னை.
  13. ஆத்ம சிந்தனை
  14. ஸோக்ரதர்
  15. பிள்ளையார் காப்பாற்றினார்
  16. ஆற்றின் மோகம்
  17. வள்ளுவர் வாசகம்
  18. வேதாந்த தீபம்.

கண்ணதாசன் இயற்றிய நூல்கள்

புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ராஜாஜி.

ராஜாஜி எழுதிய ஆங்கில நூல்கள்:

  1. Gandhi Jinnah Talks
  2. Hinduism Doctrine And Way Of Life
  3. Marcus Aurelius
  4. The Bhagavad Gita
  5. Tirukkural
  6. Bhaja Govindham
  7. Mahabharata
  8. ramayana
  9. Upanishads
  10. The Ayodhya Canto  Of  The Ramayana As Told By Kamban

பாரதியார் இயற்றிய நூல்கள்

போன்ற 25-க்கும் அதிகமான ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.

ராஜாஜி எழுதிய “திக்கற்ற பார்வதி” திரைப்படமாகிப் புகழ் பெற்றது.

ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி “Rajaji A Life ” என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement