ராமன் விளைவு என்றால் என்ன.? | Raman Effect in Tamil

Advertisement

Raman Effect in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் ராமன் விளைவு என்றால் என்ன.? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க. பொதுவாக நம்மில் பலபேருக்கு அறிவியல் சம்மந்தப்ட்ட அணைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அறிவியல் விஷயங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது அனைத்துமே வியப்பாகத்தான் இருக்கிறது.

பல்வேறு அறிவியலாளர்கள் துல்லிமான அறிவியல் சம்மந்தப்பட்ட துல்லிமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்கள். இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் அறிவியல் கலந்துள்ளது. சரி விஷயத்துக்கு வருவோம். இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய ராமன் விளைவு பற்றி பார்க்கலாம்.

Raman Effect Definition in Tamil:

சி.வி.ராமன் என்று பிரபலமாக அறியப்பட்ட இந்திய இயற்பியலாளர் சந்திரசேகர வெங்கட ராமன், 1928 ஆம் ஆண்டில்,  ஸ்பெக்ட்ரோஸ்கோபி துறையில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொண்டார். அந்த கண்டுபிடிப்பிற்கு ராமன் விளைவு என்று பெயரிடப்பட்டது. அதாவது, ஒரு பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர்.

இத்தகைய கண்டுபிடிப்பினை செய்த இராமனுக்கு1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இராமன் விளைவில் சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி.
  • முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்.
  • முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்.

ராமன் விளைவு என்றால் என்ன

ராமன் விளைவு என்றால் என்ன.?

ஒளி ஆனது ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படும் நிகழ்வு ராமன் சிதறல் அல்லது ராமன் விளைவு என அழைக்கப்படுகிறது. இராமன் விளைவு நிகழ்வு, ராமன் சிதறல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இராமன் சிதறல் இயற்பியலை விட வேதியியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Super EL Nino என்றால் என்ன.? அதன் பாதிப்பு எப்படி இருக்கும்..?

ராமன் பற்றிய சில தகவல்கள்:

சி.வி.ராமன் அவர்கள் திருச்சியில் பிறந்தவர் ஆவார். அவர் 19 வயதிலேயே தனது முதுகலை படிப்பினை முடித்தார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் ஒரு முன்னணி விஞ்ஞானியாக திகழ்ந்தவர். ஒரு முறை, அவர் கடலின் நிறம் ஏன் பச்சையாக இல்லாமல் நீலமாக இருக்கிறது என்பதை யோசித்தார். இதுதான் அவர் ராமன் விளைவை கண்டுபிடிக்க அடிப்படையாக இருந்தது. அதன் பிறகு, ராமன் மற்றும் அவரது மாணவர் கே.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் ஒளி ஒரு வெளிப்படையான பொருளின் வழியாக சிதறடிக்கும்போது அதன் அலைநீளம் மற்றும் அதிர்வெண் கூட மாறுகின்றன என்பதை சோதனைகள் மூலம் நிரூபித்தார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக  ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Today Useful Information In Tamil
Advertisement