Ranakalli Plant in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது இந்த உலகில் உள்ள அனைத்தையும் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் அனைத்து தகவல்களையும் நாம் தேடி தேடி அறிந்து கொள்வோம். ஆனாலும் நம்மால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியுமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் நாம் பல நாட்டு மருத்துவத்திற்கு பயன்படுத்தும் ரணகள்ளி தாவரம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதாவது அதன் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. இவற்றையெல்லாம் பற்றி இன்று காணலாம் வாங்க..
Ranakalli Plant Details in Tamil:
ரணகள்ளி என்பது தாவரம் காற்றுத் தாவரம் ஆகும். இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் ஆகும். அதேபோல் இது ஒரு பிரபலமான வீட்டு தாவரமும் ஆகும். பொதுவாக இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாக வளரக்கூடியவை.
மேலும் இவை ஒரு வற்றாத தாவரமாகும். அதேபோல் இவை சுமார் 1 மீ (39 அங்குலம்) உயரம் கொண்ட சதைப்பற்றுள்ள உருளைத் தண்டுகள் மற்றும் சிவப்பு நிறத்தின் இளம் வளர்ச்சியுடன் காணப்படும்.
இந்த இனத்தின் இலைகள் தடிமனாகவும், சதைப்பற்றுள்ளதாகவும், நீள்வட்ட வடிவமாகவும், வளைந்ததாகவும், க்ரனேட் அல்லது செரேட்டட் விளிம்புடன், பெரும்பாலும் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
இலைகள் மேலே 10-30 செமீ (4-12 அங்குலம்) நீளமானது, மூன்று முதல் ஐந்து ஜோடி சதைப்பற்றுள்ள மூட்டு மடல்களுடன் இருக்கும். மேலும் இவற்றில் ஆண்டு முழுவது பூக்கள் காணப்படும்.
இலைகள் பல்பில்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக குறிப்பிடத்தக்கவை . அவற்றின் விளிம்பில், பற்களுக்கு இடையில், சாகச மொட்டுகள் தோன்றும், அவை வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகளை உருவாக்குகின்றன. தாவரங்கள் தரையில் விழும்போது, அவை வேரூன்றி பெரிய தாவரங்களாக மாறும்.
பழங்கள் நுண்குமிழ்கள் (10-15 மிமீ) ஆகும், அவை தொடர்ந்து காளிக்ஸ் மற்றும் கொரோலாவில் காணப்படுகின்றன.
ராஜ்மாவை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பிறப்பிடம்:
இவை மடகாஸ்கர் என்னும் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவை ஆகும். ஆனால் தற்பொழுது ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், மெலனீசியா, பொலினீசியா, அவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது.
வேறுபெயர்கள்:
இது தமிழில் ரணகள்ளி என்றும், ஆங்கிலத்தில் Kalanchoe Pinnata என்றும், கதீட்ரல் பெல்ஸ் , ஏர் பிளான்ட் , லைஃப் பிளாண்ட் , மிராக்கிள் லீஃப் மற்றும் கோதே செடி என்றும் அழைக்கப்படுகிறது.
கொண்டக்கடலை பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்
பயன்கள்:
ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாழ்நாளில் சர்க்கரை நோய்யே ஏற்படாது என்று கூறப்படுகிறது.
காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும் என்று கூறப்படுகிறது.
ரணகள்ளி இலையை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடி மலச்சிக்கலை குணமாக்கு உதவுகிறது.
ரணகள்ளி மூலிகை இலைகளை, வெற்றிலையோடு சேர்த்து நன்றாக மைய அரைத்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.
இந்த ரணக்கள்ளி இளநரை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
புளிய மரம் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |