Ration Shop Working Days | ரேஷன் கடை வேலை நேரம் | Ration Shop Weekly Holiday in Tamilnadu
ரேஷன் கடைக்கு செல்வது மாதம் மாதம் நடப்பது தான். நாம் செல்லும் நேரத்தில் ஒரு கடைகள் இருப்பதில்லை அல்லது பொருட்கள் இருப்பதில்லை. இதற்கு என்னதான் செய்வது..? நாம் ரேஷன் கடைக்கு செல்கிறோம் என்றால் முதலில் கடை உள்ளதா..? அங்கு என்ன பொருட்கள் இப்போது கொடுப்பார்கள் என்று அனைத்து கேள்விகளையும் கேட்டுகொண்டு, அதன் பின்பு பொருட்கள் வாங்குவதற்கு பைகளை எடுத்து செல்வோம்..!
வேலைபார்ப்பவர்கள் அனைவரும் இதற்கு தனியாக லீவ் எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வார்கள். ஆனால் அன்று தான் கடைகள் இல்லாமல் போகும். இனி கவலையை விடுங்க, எந்த நேரத்தில் கடைகள் உள்ளது..? எந்த நாளில் கடைகள் திறந்து இருக்கும் என்று தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
Ration Shop Work Details in Tamil:
ரேஷன் கடை மாதத்தில் முதல் வரும் 2 வார வெள்ளிக் கிழமை விடுமுறை. அடுத்த வரும் வாரம் 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதுபோல் மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை.
ரேஷன் கடை வேலை நேரம்:
அதேபோல் ரேஷன் கடை திறக்கும் நேரம் கிராமத்திற்கு ஒரு மாதிரியும், நகர்புறத்திற்கு ஒரு மாதிரி இருக்கும்.
நகர்புறம் எடுத்துக்கொண்டால் காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரைக்கும் பொருட்கள் கொடுப்பார்கள். அதன் பின்பு மதியம் 3 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் பொருட்கள் கொடுப்பார்கள்.
கிராமம் என்றால் காலையில் 9 மணிக்கு ஆரம்பித்து 1 மணி வரைக்கும் போடுவார்கள். அதன் பின்பு மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரைக்கும் பொருட்கள் கொடுப்பார்கள்.
அடுத்து இந்த ரேஷன் கடையில் மாத கடைசியான ஒரு கூட்டம் நடக்கும். அது 30 அல்லது 31 தேதி நடக்கும். இந்த கடைசி நாளுக்கு முன்பு உள்ள நாளில் மதியம் வரை பொருட்கள் கொடுப்பார்கள். மதியத்திற்கு பிறகு கடைக்கு இந்த மாதம் எவ்வளவு பொருட்கள் உள்ளது, எவ்வளவு பொருட்கள் விற்கபட்டுள்ளது என்று கணக்கிட்டு அதை ஒப்படைப்பார்கள்.
அதேபோல் கடைக்கும் மாத கடைசியில் தான் மீதி இருக்கும் பொருட்கள் வருகிறது என்றால் அந்த பாதி நாட்கள் விடுமுறை விடாமல் முழு நாளுமே பொருட்கள் கொடுப்பார்கள். அதனால் உங்கள் கடைக்கு எப்போது பொருட்கள் வருகிறது என்று தெரிந்துகொண்டு கடைக்கு செல்லுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ரேஷன் அட்டை வகைகள் அதன் குறியீடு..!
மேலும் கடைக்கு வரும் பணத்தை கணக்கிட்டு மொத்தமாக Society -யில் கட்டுவார்கள். அது மதியத்திற்கு மேல் என்றால் காலையில் பொருட்கள் கொடுப்பார்கள். காலையில் கட்டுவார்கள் என்றால் மதியத்திற்கு மேல் பொருட்கள் கொடுப்பார்கள்.
இதிலேயே Full Time Ration கடை Part Time Ration கடை என்று தனி தனியாக இருக்கும். Full Time கடை என்றால் ஒரு கடைக்கு 1000 கார்டுகளுக்கு மேல் இருந்தால் அந்த ஒரு கடையை மட்டும் பார்த்துக் கொள்வார்கள்.
Part Time Ration கடை என்றால் கடைக்கு 200 கார்டுகள் மட்டும் இருந்தால் அவர் ஒரு ஆள் 2 அல்லது 3 கடையை பார்த்துக்கொள்வது போல் இருக்கும். ஆகவே அவர் ஒரு நேரத்திற்கு இங்கும் மற்ற நேரத்திற்கு வேறு கடைக்கும் செல்வது போல் இருக்கும். ஆகவே அதனை தெரிந்துகொள்ளவும்.
ரேஷன் கடை விடுமுறை நாட்கள்:
தேதி | கிழமை | பண்டிகை |
15.01.2025 | செவ்வாய்க்கிழமை | பொங்கல் |
25.01.2025 | சனிக்கிழமை | தைப்பூசம் |
26.01.2025 | ஞாயிற்றுக்கிழமை | குடியரசு தினம் |
11.04.2025 | வெள்ளிக்கிழமை | ரம்ஜான் |
14.04.2025 | திங்கட்கிழமை | தமிழ் புத்தாண்டு |
01.05.2025 | வியாழக்கிழமை | மே தினம் |
15.08.2025 | வெள்ளிக்கிழமை | சுதந்திர தினம் |
07.09.2025 | ஞாயிற்றுக்கிழமை | விநாயகர் சதுர்த்தி |
02.10.2025 | வியாழக்கிழமை | காந்தி ஜெயந்தி |
12.10.2025 | ஞாயிற்றுக்கிழமை | விஜய தசமி |
31.10.2025 | வெள்ளிக்கிழமை | தீபாவளி |
25.12.2025 | வியாழக்கிழமை | கிறிஸ்துமஸ் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |