Ravana Son Name in Tamil | ராவணன் மகன் பெயர்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இராவணனின் மகன் பெயர் (Ravana Son Name in Tamil) என்ன என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நம் அனைவருக்குமே ராவணன் என்பவன் யார் என்று தெரியும். இராவணனின் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார. இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று, இலங்கையில் சிறை வைத்து இருந்தான் என்று நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், இராவணனின் மகன் யார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Ravana Son Name in Tamil (இராவணன் மகன்கள்) கொடுத்துள்ளோம்.
ராவணன் மகன் பெயர்:
இந்து புராணங்களின் இராமாயணத்தின்படி இந்திரஜித் என்று அழைக்கப்படும் மேகநாதன் இராவணனின் மகனாவான். அதுமட்டுமில்லாமல், இலங்கை நாடு மற்றும் இந்திர லோகத்திற்கு இளவரசனும் இவன். இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடக்கும் போரில் இந்திரஜித் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தான். முக்கியமாக, இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் வேதங்களின் படி, இதுவரை இருந்த போர் வீரனில் இந்திரஜித் சிறந்தவன் என்று கருதப்படுகிறான்.மேகநாதன் பிறக்கும் போது, உலகில் யாரும் அவனைத் தோற்கடிக்கக்கூடாது என்றும் தனது மகன் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான்.அதுமட்டுமில்லாமல், போர்வீரனாகவும், மிகவும் அறிவானவனாகவும் இருக்க வேண்டும் என்றும் எண்ணினான். அதன்படியே ராவணன் இந்திரஜித்தை வளர்த்தான்.
இராவணன் மகன்கள்:
இராவணன் – மண்டோதரிக்கும் மகனாக பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன், நராந்தகன் மற்றும் தேவாந்தகன் ஆவார்கள்.
ராவணன் மகன் மற்றொரு பெயர்:
ராவணன் மகனான இந்திரஜித் என்று அழைக்கப்படும் மேகநாதனை பின்வரும் பெயர்களினாலும் அழைப்பார்கள்.
- சக்ராஜித்
- ராவணி
- வாசவஜித்
- வரிதனதா
- கானாந்தா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |