ஆறு விரல் வர காரணம் என்ன தெரியுமா?

Advertisement

ஆறு விரல் வருவதற்க்கான காரணம் | Reason for 6 Fingers in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் கண், மூக்கு, வாய், கை, கால் என்று அனைத்து உறுப்புகளும் இருக்கும். இருப்பினும் இந்த உறுப்புகளில் சிலருக்கு வித்தியாசம் இருக்கும். அது என்னவென்றால் சிலருக்கு கால் கட்டை விரல் பக்கத்தில் இருக்கும் விரல் நீண்டதாக இருக்கும். இதன் காரணமாக அவர்களை யாருக்கும் அடங்காதவர் என்று சொல்வார்கள். அதேபோல் சிலருக்கு கைகளில் ஆறு விரல் இருக்கும்,  அதனை கண்டு அதிர்ஷ்டம் என்று சிலர் சொல்லுவார்கள், சிலர் துரதிஷ்டம் என்று சொல்வார்கள். இந்த ஆறாம் விரல் அதிர்ஷ்டமா, துரதிஷ்டமா என்பதை அடுத்த பதிவில் தெரிந்துகொள்வோம். இந்த ஆறு விரல் வர காரணம் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த ஆறு விரல் வருவதற்கான காரணத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..

ஆறு விரல்:Polydactyly

ஒரு மனிதனுக்கு கையில் அளவுக்கு அதிகமான விரல்கள் இருந்தால் அதனை Polydactyly என்று சொல்லப்படுகிறது. இந்த விரல்களின் அமைப்பு நுண்ணியமாக பார்க்கும்போது, நமது சுண்டு விரலுக்கு பக்கத்தில் அல்லது கட்டை விரலுக்கு பக்கத்தில் கூடுதலாக விரல்கள் இருக்கலாம்.

இந்த விரல் சாதரணமாக ஒரு சிறிய கட்டியாக எந்த ஒரு அசைவுகளும் இல்லாமல் இருக்கலாம்.

அல்லது ஒரு முழு எழும்போடு சேர்ந்த ஒரு விரலாக இருக்கலாம். இப்படி இருக்கும் போது விரல் அசைக்க முடியாமலும் இருக்கலாம்.

அல்லது அந்த ஆறு விரலும் அசைப்பது போலும் ஒரு சிலருக்கு இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தூங்கும் போது உங்களை யாரோ அமுக்குவது போல் தோன்றுகிறதா..? அதற்கு இது தான் காரணம்..?

ஆறு விரல் (Polydactyly) எதனால் வருகிறது?

கைகளில் ஆறுவிரல் வருவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மரபணு தான். அதாவது மரபு ரீதியாக ஒருவருக்கு இந்த ஆறாம் விரல் (Polydactyly) வருகிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தாத்தா, பாட்டி, தந்தை, தாய் இவர்களில் யாருக்காவது கைகளில் கூடுதலாக விரல்கள் இருந்தால், அவர்கள் பிள்ளைகளுக்கும் கைகளில் கூடுதலாக விரல்கள் வருமாம்.

மரபு சார்ந்த யாருக்கும் இந்த பிரச்சனை இல்லை என்றால், பிறக்கும் போதே அவர்களுக்கு ஏதாவது உடலில் குறைபாடு இருந்திருக்கலாம்.

இந்த ஆறாம் விரல் சுண்டு விரலில் இருந்தால் எந்த ஒரு இடையூறும் இருக்காது, அதுவே கட்டை விரலுக்கு பக்கத்தில் இருந்தால் அது சில இடையூறுகளை கொடுக்கலாம். ஆக இந்த விரலை அகற்ற வேண்டும் என்றால் அதற்கும் அறுவை சிகிச்சைமுறைகள் இருக்கிறது. ஆக மருத்துவரை அணுகி அந்த அறுவை சிகிச்சையை நீங்கள் செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடலில் கப்பல் எப்படி மூழ்காமல் மிதக்கிறது காரணம் தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement