மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

Advertisement

Moi Panam in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்.  இன்றைய காலகட்டத்திலும் நம் வீட்டில் எந்த ஒரு நல்ல விசேஷங்கள்  நடைபெற்றாலும் மொய் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த மொய் பணம் வைக்கும் பழக்கம் அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 501 என்று ஒற்றைப்படை எண்ணில் வைக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மொய் பணம் ஏன் ஒற்றைப் படை எண்ணில் வைக்கிறார்கள்..? 

Moi Panam in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இந்த காலம் வரை கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளிள் மொய் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. நம் தமிழ் மக்கள் அனைவரும் ஏதேனும் விசேஷங்களுக்கு சென்றால், மொய் செய்யும் போது 100, 500, 1000 என்று மொய் வைக்காமல் அதனுடன் 1 ரூபாயை சேர்த்து வைப்பார்கள்.

ஏன் அப்படி வைக்கிறார்கள் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கிறது. அதுபோல ஏன் 1 ரூபாயை வைக்கிறார்கள் அதற்கு பதிலாக 2 ரூபாயை வைக்கலாமே என்ற கேள்விகளும் இருக்கும். இதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.

இரட்டை படை எண்ணை எளிதாக வகுத்து விடலாம். அப்படி நாம் இரட்டை படை எண்ணை வகுக்கும் போது பூஜ்யம் (0) அல்லது ஏதாவது ஒரு முழு எண் தான் வரும். ஆனால் ஒற்றைப்படை எண்ணால் வகுக்கும் போது பூஜ்யம் (0) வராது. அதுபோல, வரும் விடையும் புள்ளி கணக்கில் தான் வரும்.

உதாரணமாக, 100/2=50, 101/2=50.5  

நாம்  ஒற்றைப் படையில் மொய் வைக்கும் போது, உனக்கும் எனக்கும் இடையில் உள்ள உறவு இன்றுடன் முடியவில்லை. நம்மிருவருக்கும் இடையில் உள்ள உறவு இன்னும் மீதம் இருக்கிறது. இந்த உறவு தொடர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அந்த காலத்தில் ஒற்றை படையில் மொய் வைத்து வந்தார்கள். 

லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..?

 

இதுபோல நாம் இரட்டை படையில் மொய் வைக்கும் போது மொய் வைப்பவருக்கும் வாங்குபவர்க்கும் இடையே, உனக்கும் எனக்கும் எந்தவொரு உறவும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்வதாக நம்புகிறார்கள். இதன் காரணமாக தான் நம் தமிழர்கள் இரட்டை படை எண்ணில் மொய் வைப்பதில்லை.

அதுமட்டுமில்லாமல், அந்த காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டு நாணயங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

எவ்வளவு தான் பணம் தாள்களாக வந்தாலும் நாணயத்தின் மதிப்பு குறையாது என்பதை சொல்லும் வகையில், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம் என்றும் இதை நீங்களும் தர்மம் தவறாமல் செலவிட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த மொய்ப் பணம் 1 ரூபாயை கொண்டு வைக்கப்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement