வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வந்தே பாரத் ரயிலில் ஏன் சீட்டா சின்னம் அமைக்கப்பட்டுள்ளது..?

Updated On: May 18, 2023 10:12 AM
Follow Us:
reason for vande bharat logo cheetah in tamil
---Advertisement---
Advertisement

Reason For Vande Bharat Logo Cheetah in Tamil

இந்தியாவில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வந்தே பாரத் ரயிலின் லோகோ 4 முறை மாற்றப்பட்டுள்ளது. இந்திய இரயில்வே முதல் வந்தே பாரத் ரயிலை 2019 இல் புது தில்லி-வாரணாசி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு பிறகு பல இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதன் முதலில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில் முதல் தற்போது உள்ள வந்தே பாரத் ரயில் வரை அதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவற்றின் லோகோ மட்டும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் இப்போது வந்தே பாரத் ரயிலுக்கு சீட்டா சின்னம் வைக்கப்பட்டுள்ளது. எனவே இப்பதிவில் வந்தே பாரத் ரயிலுக்கு சீட்டா சின்னம் வைத்ததற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What is the Reason to Put Cheetah Symbol on Vande Bharat Train.?

 reason for vande bharat logo cheetah in tamil

சமீபத்தில் திருவனந்தபுரம்-காசர்கோடு வழித்தடத்தில் 15-வது வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சீட்டா சின்னம் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் சீட்டா சின்னம் அமைப்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.

சீட்டா என்பது வேகத்தின் சின்னம் ஆகும். வந்தே பாரத் ரயில் ஒரு அரை அதிவேக ரயில் ஆகும். எனவே இதனை ஒப்பிடும் வகையில் வந்தே பாரத் ரயிலுக்கு சிறுத்தை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில் பிரான்டிங்கை மேம்படுத்துவதே லோகோ மாற்றத்திற்கான காரணம் ஆகும்.

போலீஸ் ‘காக்கி’ சட்டை அணிய காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..

அதுமட்டுமில்லாமல், இவற்றின் மற்றொரு காரணம் என்னவென்றால், சிறுத்தை மணிக்கு 130 கிலோமீட்டர் ஓடக்கூடிய விலங்காகும். அதேபோல், அரை அதிவேக வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. எனவே இவற்றின் வேகத்தின் அடையாளமாக சிறுத்தை சின்னம் வைக்கப்பட்டுள்ளது. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ளன. இதில் இரண்டு எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கோச் உள்ளன. மேலும் இந்த ரயில் மொத்தம் 1,128 பயணிகள் பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கிறது.

ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now