Plastic Number 1 to 7
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் வீட்டில் பயன்படுத்த கூடிய பொருளாக பிளாஸ்டிக் தான்இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களில் நிறைய வகைகள் இருக்கிறது,நிறைய கலர்களில் கிடைக்கிறது. இதனாலேயே மக்களின் கவனம் பிளாஸ்டிக்கில் செல்கிறது. அதுமட்டுமில்லமால் குறைவான விளையாகவும் இருப்பதால் நடுத்தர மக்களும் வாங்க கூடிய அளவில் இருக்கிறது.
வீட்டில் பயன்படுத்த கூடிய பொருட்கள் மட்டுமில்லமால் குடிக்கிற தண்ணீ பாட்டில் முதல் உணவு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் வரை அனைத்தும் பிளாஸ்டிக் மயமாக இருக்கிறது. இதில் ஒவ்வொரு வகைகள் உள்ளது. அதனை பற்றி இந்த முழுமையாக அறிந்து கொள்வோம்.
Plastic Number 1:
பிளாஸ்டிக் பாட்டில் 1 ஆனது ஜூஸ் பாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவற்றில் இருக்கும். இந்த பாட்டிலை ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி போட வேண்டும். ஏனென்றால் இதில் பாக்ட்ரியாவானது உருவாகி கொண்டே இருக்கும், அதனால் இந்த பாட்டிலை ஒரு பயன்படுத்தி விட்டு தூக்கி போடுங்கள் மறுபடியும்பயன்படுத்தாதீர்கள் .,
Plastic Number 2 :
இந்த பாட்டிலானது அதிக ஹை டென்சிட்டி உள்ள பாட்டிலாக இருக்கிறது. இந்த பாட்டில் detergent மற்றும் ஷாம்பூ பாட்டில் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது. இந்த பாட்டிலை recycle செய்யலாம்.
Plastic Number 3:
இந்த பிளாஸ்டிக் பாட்டிலானது ஆபத்தான கெமிக்கல் பொருட்கள் கலந்திருப்பார்கள். இந்த பிளாஸ்டிக் பொருட்களில் கலந்திருக்கும் கெமிக்கலால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது புற்றுநோய் மற்றும் கருவுற்றிந்தால் குழந்தை கலைவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வாங்கும் இது இல்லாம வாங்கிடாதீங்க..
Plastic Number 4:
நிறைய பிளாஸ்டிக் உறைகள் LDPE பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன. இது மளிகைப் பைகள் மற்றும் செய்தித்தாள்களை வைத்திருக்கும் பைகள் போன்றவற்றை தயாரிக்கபயன்படுத்தப்படுகிறது, இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
Plastic Number 5:
நம்பர் 5 கொண்ட பாட்டில்களான பீடிங் பாட்டில், தண்ணீர் பாட்டில் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இவை பாதுகாப்பான ஒன்றாக இருக்கிறது.
Plastic Number 6 &7:
பிளாஸ்டிக் பொருட்களில் 6 மற்றும் 7 என்று போடப்பட்டிருக்கும் பாட்டில்களை பயன்படுத்தாதீர்கள். இது ஒரு பாய்சன் ஆக உள்ளது. அதனால் ஒரு போதும் இந்த எண்கள் போட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |