What is The Theme of The Republic Day 2025 in Tamil | குடியரசு தினத்தின் கருப்பொருள் 2025
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் (Republic Day 2025 Theme in Tamil) பற்றி கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் கருப்பொருள் என்னவென்று கேட்டால் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துக்கொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் குடியரசு தினம், ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 2025, 76 -வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, 76- வது குடியரசு தினத்தின் கருப்பொருள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Republic Day 2025 Theme in Tamil:
இந்தியா 2025 ஆம் ஆண்டு, தனது 76 ஆவது குடியரசு தினத்தை ஜனவரி 26,2025 அன்று கொண்டாடவுள்ளது. முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1951 அன்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஒவ்வொருஆண்டும் , இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 2025, ‘Swarnim Bharat: Virasat aur Vikas’ (Golden India: Heritage and Progress) (‘ஸ்வர்னிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்’ (தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம்)) என்ற கருப்பொருளை கொண்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர்..!
Republic Day 2025 Theme Meaning:
இந்த கருப்பொருள் ஆனது, நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ‘Swarnim Bharat: Virasat aur Vikas’ (Golden India: Heritage and Progress) என்பது, இந்தியாவின் கலாச்சாரத்தினையும், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தையும் கருத்தில் கொண்டு கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பு மற்றும் நாடு குடியரசாக மாறியதை குடியரசு தினம் குறிக்கிறது. 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்கிறார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பல்வேறு ராணுவ வீரர்களின் அணிவகுப்புகளும், பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களின் படைப்புக் கண்காட்சிகளும் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் போலவே, Republic Day 2025 Theme ஆனது, இந்தியாவின் கலாச்சார வேர்களையும் அதன் முன்னேற்றத்தையும் குறிக்கும்.
குடியரசு தினம் கொடி ஏற்றும் முறை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |