வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடியரசு தின பேச்சு போட்டி உரை

Updated On: January 20, 2025 7:02 PM
Follow Us:
republic day speech in tamil for primary students
---Advertisement---
Advertisement

Republic Day Speech in Tamil for Primary Students

வருடந்தோறும் ஜனவரி 26-ம் தேதி குடியற்சு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவற்றில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதில் ஒன்று தான் பேச்சு போட்டி. இதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பார்கள்.

தங்களை பேச்சு போட்டிக்கு தயார்படுத்தி கொள்வதற்கு பலரும் மொபைலில் தான் சர்ச் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் பிரைமரி மாணவர்களுக்கான பேசுச்சு போட்டி உரை பற்றி காண்போம்.

பிரைமரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி உரை:

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இன்றைய நாளில் நம்முடைய நாட்டின் மகத்தான குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு கூடியிருக்கிறோம். இந்த நாளானது சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் நான் நம்முடைய தேசத்தில் எதிர்காலத்தை பார்க்கிறேன்.

குடியரசு தின பேச்சு போட்டி

1950-ம் ஆண்டு பல சவால்களை சமாளித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நம் நாட்டின் நெகிழ்ச்சியயும், வலிமையையும் வெளிக்காட்டியது. நமதுநாட்டின்சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களை நினைவு கூறு வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமானது ஒரு ஆவணம் அல்ல சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும்  நீதி, சமத்துவம், சுதந்திரம் போன்றவற்றை உணர்த்துகிறது.

ஒவ்வொரு மாணவரும் இந்த நாளை கொண்டாடும் போது ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் தான் நாளைய எதிர்காலம் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அரசாலியமைப்பின் மதிப்பை நிலைநிறுத்தி நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்க வேண்டும்.

இந்தியாவை சுதந்திர நாட்டிற்காக போராடிய வீரர்களை நாம் ஒரு போதும் மறக்க கூடாது, இவர்களை நம் எண்ணங்களில் வைத்து கௌரவிப்போம். ஜனவரி 26-ம் தேதி 1950-ம் ஆண்டுஇந்திய அரசிலமைப்பு சட்ட வந்ததிலிருந்து குடியரசு தினம் கொண்டப்படுகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இதில் தேசத்தை ஆளும் தலைவர்களை தேர்ந்தெடுக்க மக்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.  டாக்டர் ராஜேந்திர பிரசாத் தான் இந்தியாவில் முதல் குடியரசு தலைவராக பணியாற்றினார்.

1947-ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது தேசமானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சில முன்னேற்றங்களுடன், வேலையின்மை, வறுமை, ஊழல், கல்வியறிவின்மை மற்றும் சமத்துவமின்மை போன்ற சில பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவது மட்டுமில்லை, சமூக நல்லிணக்கம் மற்றும் கலாசாரத்திலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று உறுதியளிப்போம்.

ஜெய் ஹிந்த்.!

Republic day speech in tamil for primary students 2025:

இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன்.

இந்த நாள் ஆனது நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி, சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டில் வாழும் உரிமையை வழங்கியவர்களின் போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும் நாளாக இருக்கிறது.

கல்வியாளர்களாக, நமது அரசியலமைப்பில் இருக்கும் சகிப்புத்தன்மை, சமத்துவம், நீதி போன்றவற்றை மாணவர்களிடம் மனதில் பதிப்பது நமது கடமையாகும். நம் முன்னோர்களின் தியாகங்கள் வீண் போகாமல் இருக்க, இந்த மூன்றையும் பாதுகாத்து போற்ற வேண்டும்.

பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்தது மட்டுமில்லாமல், நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் நிறைந்த ஒரு தேசத்தின் கனவுகளை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நமது தாய்நாட்டை பெருமைப்படுத்தவோம்.

welcome speech for republic day in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now