குடியரசு தின பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

Advertisement

குடியரசு தின பேச்சு போட்டி 

ஒரு வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது இந்திய நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் திகழ்கிறது. வருடந்தோறும் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு தின விழா கொண்டாடப்டுகிறது.

இந்நாளில் பள்ளிகள், அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குடியரசு தின உரை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அல்லது பிற நிறுவனங்களில் காணக்கூடிய பொதுவான விஷயங்கள் ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அன்றைய நாளில் குடியரசு தினத்தின் சிறப்புகளை பற்றி பேசுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் குடியரசு தின பேச்சு போட்டி பற்றி காண்போம்.

குடியரசு தினம் என்றால்  என்ன.?

குடியரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி தான் மக்களாட்சி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.

குடியரசு என்பது மக்களே தங்களுக்கான அரசாங்கத்தையும் அதனுடைய சட்ட திட்டங்களையும் உரிமைகளையும், கடமைகளையும், நாட்டை கட்டமைத்து முன்னேற்றுவதற்கு உண்டான அனைத்து வழிகளையும், அனைத்து மக்களுக்கான சமூக நீதியையும் வழி வகுப்பது தான் ஆகும்.

welcome speech for republic day in tamil

குடியரசு தின வரலாறு:

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ம் ஆண்டுஜனவரி 26-ம் நாள் அமளுக்கு வந்தது. இதனை நினைவுபடுத்தும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26 ஆம் ஆண்டு கன்ஸ்டிட்யூன்ட் அசெம்பிளி ஆப் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இது இந்திய அரசு சட்டம் 1935-இல் இருந்து பின்பற்றப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட ஒரு குடியரசு உருவாவதற்காக வழிவகை செய்தது.

Republic Day Speech in Tamil:

நம் பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் மற்றும் இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர காற்றின் புதிய வாசனையை நுகர்ந்து சுதந்திர மேகம் நம்மை சூழ்வதை காண இங்கு குழுமி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுவாசித்தோம் சுதந்திரத்தை? எண்ணிப்பாருங்கள், ஒருபுறம் அண்ணல் காந்தியுடன் இணைந்து அகிம்சை வழியில் போராட்டம், மறுபுறம் தோட்டாவை எதிர்த்த சுபாசுடன் இணைந்து அதிரடிப் போராட்டம். கண்டம் கடந்து கப்பல் ஓட்டிய வீரத்தமிழனின் மனதிலும், சிறையின் படியேறி தடியில் அடி வாங்கி யுத்தம் செய்து ரத்தம் சிந்திய தலைவர்கள் அனைவரின் சிந்தையிலும் நிரம்பி இருந்தது என்ன தெரியுமா? அடுத்த தலைமுறையாவது சுதேசி காற்றை சுவாசிகட்டுமே என்ற எண்ணம் தான்.

அன்னியரையும் அன்று சபாஷ் போட வைத்தார் சுபாஷ. ஆனால் இன்று உழவர்களுக்கு அணியை கூட ஆடை பற்றாக்குறை, குணியக்கூட குடிசை பற்றாக்குறை.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர்

உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

என்று பாவேந்தர் கூறியுள்ளார், அதாவது ஒரு நாள் கைதிகள் சாப்பிடுவதற்கு ரொட்டி கொடுத்தார்களாம். அதில் மண் ஒட்டியிருந்தது அதை நேரு அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர் நீங்கள் கேட்ட தாய் மண் தானே விழுங்குங்கள் என்று பதில் கூறினார். அதற்கு நேரு அவர்கள் எங்கள் நாட்டை கேட்பது விழுங்குவதற்கு அல்ல மக்களை வாழ வைப்பதற்கு என்று கூறியுள்ளார்.

விவசாய நாடு என்று பெயர் கிடைத்து விட்டது, ஆனால் விவசாயிகளுக்கு தரமான உணவு கிடைக்கவில்லை. விடுதலை என்ற பெயரை  பெற்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம், ஆனால் நாம் மூச்சை சுவாசிக்க கஷ்டப்படுகின்றோம். காரணம் மரத்தை வெட்டினோம் மழை நின்று போச்சு. மண்ணுல மாசு சேர்த்தோம் இன்று மருத்துவ செலவு கூடி போச்சி. ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டோம், இன்று நம் வாழ்க்கை படலமே வம்பா போச்சி.

Drawing on Republic Day | குடியரசு தின வரைபடங்கள்!

நம்முடைய நாட்டை போன் விளையும் பூமி என்று கூறினார்கள், ஆனால் இன்றோ குடிக்கும் தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்கும் நிலையில் இருக்கின்றோம்.

நம் நாட்டிற்கு எது தேவை என்பதை அறிந்து, கலாமின் கனவுகளை நெனவாக்கி, உண்டு வாழ்வது மட்டுமே வாழ்வல்ல வெற்றியோடு வாழ்வதே வாழ்வு என்பதை உணர்ந்து நமக்கான வழியை செதுக்கி கொண்டால் சுதேசி காற்றை இனிமையாக சுவாசிக்கலாம் என்று கூறி என் உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement