Riddles in Tamil with Answers
வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த விடுகதைகள் மற்றும் விடைகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக விவரித்து சொல்லப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இந்த புதிரில் ஆயிரம் அர்த்தங்கள், விஷயங்கள் மற்றும் கருத்துக்கள் அடங்கி இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கு விடுகதை ஒருவரிடம் கேட்கவும், அல்லது அதற்கு விடை கண்டுபிடித்து சொல்லவும் அதிக ஆர்வமாக இருக்கும். அந்த வகையில் இப்பதிவில் தமிழ் விடுகதை மற்றும் விடைகள் பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக படித்து அதற்கான விடைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
1 இது ஒரு ஐந்து ஆங்கில வார்த்தை இதன் கடைசி நான்கு எழுத்தை நீக்கிய பிறகும், இந்த வார்த்தையின் உச்சரிப்பிலோ, இதன் அர்த்தத்திலோ எந்த மாற்றமும் இருக்காது. அது என்ன வார்த்தை?
விடை: OUEUE (Q)
2 செல்வியின் மகள் அருணுடைய மகளின் தாய் என்றால், அருண் செல்விக்கு என்ன முறை வேண்டும்?
விடை: மருமகன்
விளக்கம்: அருணுடைய மகளின் தாய் என்றால் அது அருணின் மனைவி, அருணின் மனைவி செல்வியின் மகள் என்றால், அருண் செல்விக்கு மருமகன்.
3 நீங்கள் கையில் தீப்பெட்டியுன், ஒரு இருட்டு அறைக்குள் செல்கிறீர்கள் அங்கே, ஒரு மெழுகுவர்த்தி, ஒரு விளக்கு, ஒரு தீப்பந்தம் உள்ளது, அதில் எதை முதலில் பற்றவைப்பீர்கள்.
விடை: தீக்குச்சியை
4 ஒரு சிறுவன் கடைக்கு சென்று ஒரு டஜன் முட்டைகளை வாங்குகிறான், அவன் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது 3 முட்டைகளை தவிர அனைத்து முட்டைகளும் உடைந்து விட்டது. அப்படியென்றால் மீதம் எத்தனை முட்டைகள் உடையாமல் இருக்கும்.
விடை: மூன்று முட்டைகள்.
5 ஒருதாய்க்கு மூன்று பிள்ளைகள் ஒரு பிள்ளை நான் உள்ளே வரவா? என கேட்டான், மற்றவன் நான் வெளியே போகவா ? என கேட்டான், மூன்றாமவன் இன்றைக்கு என்ன கறி? என கேட்டான் வந்த மூன்று கேள்விக்கும் தாய் ஒரு பதில் தான் அளித்தால் அது என்ன பதில்?
விடை: கோவக்காய்
விளக்கம்: கோ (போ) – வா – காய்
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
தமிழ் விடுகதைகள் 400 With Answer
6 ஒரு தந்தையும், மகனும் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றன. அங்கே அந்த பையனை பார்த்த மருத்துவர், அய்யோ இது என் மகன் என கதறி அழுகிறார்! அது எப்படி சாத்தியம்?
விடை: மருத்துவர் தாய்.
விளக்கம்: அந்த பையனின் தாய் தான் மருத்துவர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |