சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் | Riddles in Tamil

Riddles in Tamil

நகைச்சுவை விடுகதைகள் | Tamil Riddles With Answers

New Riddles in Tamil:- வணக்கம் இன்றைய பதிவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விடுகதைகள் மற்றும் விடைகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக விவரித்து சொல்லப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இந்த புதிரில் ஆயிரம் அர்த்தங்கள், விஷயங்கள் மற்றும் கருத்துக்கள் அடங்கி இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கு விடுகதை ஒருவரிடம் கேட்கவும், அல்லது அதற்கு விடை கண்டுபிடித்து சொல்லவும் அதிக ஆர்வமாக இருக்கும். அந்த வகையில் இப்பதிவில் தமிழ் விடுகதை மற்றும் விடைகள் பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக படித்து அதற்கான விடைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

புதிர் விடுகதைகள் | Tamil Puthir with Answer:

விடுகதைகள் – Tamil Riddles With Answersவிடைகள் 
1. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?வாழை
2. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ?தண்ணீர் 
3. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன?தேங்காய்
4. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? மிளகாய்
5. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?நெல்
6. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?வெங்காயம்
7. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?மெழுகுவர்த்தி
8. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல, உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை, துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?தலையணை
9. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?கடிகாரம்
10. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?வியர்வை

சிறந்த நகைச்சுவை விடுகதைகள் | Riddles in Tamil 

விடுகதைகள் – Tamil Riddles With Answersவிடைகள் 
1. போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?நத்தை
2. இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?தட்டாம் பூச்சி
3. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?கண் 
4. அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன?வளையல்
5. ஓடியாடித் திரியும் – உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன?கொசு
6. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி… அது என்ன?பிள்ளைக்கனி
7. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன?சவுக்குமரம்
8. நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..! அவன் யார்?உப்பு 
9. செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல; சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன?கண்ணாடி
10. அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது! அது என்ன?கால் படி, அரை படி

 

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil