வயதுக்கு வந்தால் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும்.?

Advertisement

Rituals after a girl attains her Puberty | வயதுக்கு வந்தால் செய்ய வேண்டிய சடங்குகள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் நிறைய வகையான பதிவுகளை பார்த்து வருகொன்றோம் எந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் வயதுக்கு வந்தால் செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதை பற்றி தான்.

அந்த காலத்தில் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நல்ல காரியமாக இருந்தாலும் சரி அல்லது கெட்ட காரியமாக இருந்தாலும் சரி அதனை இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒரு சடங்கு வைத்திருப்பார்கள். அதனை நமக்கு சொல்லி தருவார்கள், ஆனால் இந்த காலத்தில் வாழ்வது ஒரு கணவன் மனைவியின் ஒரு தனியான வாழ்க்கையை வாழ்கின்றன, கூட உற்றார் உறவினர், நண்பர்கள் என்று யாரும் இருப்பதில்லை. அப்படியே அவர்கள் இருந்தாலும் அவுங்களுக்கும் அந்த  சடங்கு முறை என்ன என்று தெரிவது கிடையாது. இதனாலேயே பலருக்கு ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் சரி அதனை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. ஒரு சரியான வழிகாட்டுதல் என்பது இல்லை.

அந்த வகையில் ஒரு பெண் வயதிற்கு வந்த பிறகு அவர்களுக்கு செய்ய கூடிய சடங்கு முறை என்பது பொதுவாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும், ஒவ்வொரு வகையான சடங்கு முறையாக சொல்லப்பட்டிருக்கும். அதனால் இன்னார் இப்படி செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய பதிவு இருக்கிறது. ஆனால் பொதுவாக அனைவரும் செய்யக்கூடிய ஒரு சடங்கு முறை என்று இருக்கிறது அதனை அனைவருமே செய்யலாம் அதனை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை முதலில் முழுமையாக படிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைவதற்கு காரணம் என்ன.?

வயதுக்கு வந்தால் செய்ய வேண்டிய சடங்குகள்:

  • ஒரு பெண் பக்குவமடைகின்ற வயது என்பது முன்பு 13 முதல் 18 வயதிற்குள் இருந்தது. ஆனால் இப்பொழுதோ இருக்கின்ற வயது என்பது வேறு ஏன் என்றால் இப்பொழுது உள்ள பெண் குழந்தைகள் 8 முதல் 11 வயதிற்குலேயே வயதிற்கு வந்துவிடுகின்றன.
  • ஆக ஒரு குழந்தை இந்த நிகழ்வினை முதலில் தன் அம்மாவிடம் தான் பயந்துகொண்டு சொல்ல நினைக்கும். அப்பொழுது அம்மா அந்த குழந்தையிடம் இது ஒரு இயற்கையான நிகழ்வு, இது ஒரு பெண்மையுடைய உயர்வை காட்டக்கூடியது. ஆக இதனை கண்டு பயப்பட வேண்டும் என்று புரியவைக்க  வேண்டும்.
  • பிறகு அந்த பெண் வயதுக்கு வந்த நேரத்தை ஏதாவது ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் ருது ஜாதகம் எழுதுவதற்கு இந்த நேரம் கண்டிப்பாக தேவைப்படும். நாளை பெண் பார்க்க வருகிறவர்கள் சிலர் ருது ஜாதகத்தை வைத்தும் கணக்கிட்டு தான் பெண்ணை நிச்சயம் பண்ணுவாங்க. ஆக அந்த பெண் வயதுக்கு வந்த நேரத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு அந்த பெண் குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்துவிட்டு பாதுகாப்பாக கிழக்கு நோக்கிய இடத்தில் அமரவைக்கவும்.
  • போக்கு யாருக்கெல்லாம் சொல்ல வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் இந்த விஷயத்தை சொல்லுங்க. முக்கியமாக முதலில் தாய்மாமனுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டும், தாய்மாமன் தன இந்த சடங்கில் முக்கிய பங்கு இருக்கிறது, அதன் பிறகு அத்தைகளுக்கு இந்த விஷத்தை தெரியப்படுத்துங்கள்.
  • உதாரணத்திற்கு பெண் காலையில் வயது வந்திருந்தால், உடனே அவர்களுக்கு காலையிலேயே தலைக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு வேண்டாம், மாலை 6 மணிக்கு மேல் தான் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஆக அது வரை அந்த குழந்தையை ஓரமாக அமரவைக்கவும்.
  • மாலை 6 மணிக்கு மேல் சூரியன் மறைந்த பிறகு ஒரு 5 சுமங்கலிகளை வைத்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு அண்டாவில் மஞ்சள் கலந்த நீர், ஒரு சோம்பு, ஒரு சல்லடை இவை எல்லாம் தாய்மாமன் வீட்டில் வாங்கி வந்ததாக இருக்க வேண்டும். ஒரு ஸ்டூலில் அந்த பெண்ணை அமர வைத்து சல்லடையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
  • மாமா வீட்டில் வாங்கி வந்த புது ஆடையை அந்த குழந்தைக்கு போட்டு விட்டு தலை நிறைய பூசுடி, போட்டு வைத்து, சந்தனம் தடவி அலங்கரிக்க வேண்டும்.
  • பிறகு இந்த குழந்தைக்கு இனிப்பு வழங்கி தனியாக அமர வைக்க வேண்டும். அந்த குழந்தையை அமர வைக்கும் இடத்தில் ஒரு தடுப்பு போட வேண்டும் அதற்கு உலகை, அருவாள், வறுகோள் அல்லது ஏதாவது ஒரு இரும்பு பொருளை தடுப்பாக போட வேண்டும்.
  • இந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும். நல்லெண்ணெய், கருப்பட்டியில் செய்யப்பட்ட உணவுகள், உளுந்தங்களி இவையெல்லாம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இவை எல்லாம் அந்த குழந்தையின் இடுப்பு எலும்பை பலப்படுத்தும். மேலும் கர்ப்பப்பையை உறுதிப்படுத்தும்.
  • இவை எல்லாம் குழந்தை வயதுக்கு வந்த அன்றைய நாள் செய்ய வேண்டிய சடங்கு முறை ஆகும்.
  • பிறகு வயது வந்த குழந்தைக்கு ஒரு வாரம் வரை ஆரோக்கியமான உணவுகளை வழங்கி, பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். உதாணர்த்திக்கு படித்துக்கொண்டு இருந்தால் உடனே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டாம் ஒரு வாரத்திற்கு குழந்தையை வீட்டிலேயே வைத்து இந்த விஷயத்தை எடுத்து சொல்ல வேண்டும்.
  • ஒரு வாரம் கழிந்த பிறகு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம். ஏன் என்றால் ஒரு குழந்தைக்கு இதுதான் தன்னுடைய உடல் நிலை என்று தெரிந்துகொள்வதற்கு குறைந்தது ஒரு வாரமாவது தேவைப்படும். ஆக அதுவரையாவது அந்த குழந்தையை நம் வீட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
  • அதன் பிறகு இதற்கு 16 நாட்கள் தீட்டு கணக்கு என்று இதற்கு இருக்கிறது. ஆக 16 நாட்கள் நிறைவடைந்த பிறகு புண்ணியதானம் செய்து அந்த குழந்தையை வீட்டிற்குள் அழைக்கவும்.
  • புண்ணியதானம் செய்யும் வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற கூடாது, கோயிலுக்கு செய்யக்கூடாது. 16 நாள் தீட்டு கலந்த பிறகு வீட்டில் விளக்கேற்றலாம், கோயிலுக்கு செல்லலாம்.
  • அதன் பிறகு அந்த குழந்தைக்கு சடங்கு சுத்துவது என்ற நிகழ்வு இருக்கிறது அதனை நீங்கள் 16-வது நாள் அன்றும் செய்யலாம் அல்லது அந்த பெண்ணின் திருமணத்திற்கு முன்பு செய்துவிட வேண்டும். உங்களுக்கு எப்படி விசத்தியோ அப்பொழுது அந்த சடங்கை செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வளைகாப்பு செய்ய தேவையான பொருட்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement