லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க RTI மனு எழுதுவது எப்படி?

Advertisement

லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க RTI மனு எழுதுவது எப்படி? – RTI Complaint Format in Tamil

RTI Complaint Format in Tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க RTI மனு எழுதுவது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். ஒருவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து எந்த ஒரு நடவடிக்கையும் நடக்கவில்லை என்றால், அவர்கள் போய் கேட்டு பார்த்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செயல்படவில்லை என்றால். அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி ஒரு மனு தயாரித்து, ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் பொது தகவல் அலுவலருக்கு கொடுக்கும் பட்சத்தில் அந்த மனுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது பட்டா மாற்றம் செய்வதற்கு மட்டும் தான் என்று இல்லை, FMB-யில் உட்பிரிவு பிரிப்பதற்கு, அடங்கல் நகல், ஆ பதிவிடே இது போன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்கள் வேண்டும் என்றாலும் இங்கு கூறப்பட்டுள்ள மனுவை மாடலாக வைத்து நீங்கள் மனு தயாரித்துக்கொள்ளலாம். சரி வாங்க இபொழுது RTI மனு எழுதுவது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6-யின் கீழ் கோரிக்கை மனு..!

தேதி: 12.04.2023
இடம் காரைக்குடி

10 ரூபாய்க்கான நீதி மன்ற வில்லை இங்கு ஓட்ட வேண்டும்.

அனுப்புநர்: 

S. ராம்குமார்,
S/O சிவகுமார்,
பெருமாள்கோயில் தெரு,
காரைக்குடி,
தொலைபேசி எண் (91XXXXXXXX)

பெறுநர்:

திரு போது தகவல் அலுவலர்,
வட்டாச்சியர் அலுவலர்,
காரைக்குடி.

பொருள்:- 

பட்டா மாற்றம் தொடர்பாக தகவல் வேண்டி.

ஐயா,

           நான் இ சேவை மூலம் பட்டா மாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ளேன். விண்ணப்ப எண் XXXX விண்ணப்ப நாள் XXXX.

தேவைப்படும் விவரம்:

    1. பட்டா மாறுதல் விண்ணப்பித்து எவ்வளவு நாட்களுக்கு மாறுதல் பெற்று கிடைக்கும்.
    2. மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
    3. காலதாமதம் ஆவதற்கான காரணம் தேவை.

தங்கள் உண்மையுள்ள
S. ராம்குமார்.

அவ்வளவு தாங்க இப்படி தான் RTI மனு எழுத வேண்டும். இங்கு உதாரணத்திற்கு பட்டா மாற்றுதலுக்கா மனு எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு வருவாய் துறை சார்ந்த எந்த ஆவணம் வேண்டி மனு எழுத உள்ளீர்களோ அந்த ஆவணத்தின் பெயர் மற்றும் அதனுடைய விவரங்களை உள்ளிட்டு மேல் கூறப்பட்டுள்ள மாடல் போல் மனு தயாரித்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு எழுதப்படும் மனுவை ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மேல் நீங்க பெறுநர் என்பதில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன? தெரிந்துகொள்ளுங்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement