இந்த ரத்தினக்கல் அணிபவர்களின் வாழ்க்கை மாறும்..!
Ruby Stone in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இந்துக்களின் வழிபாட்டில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ஜோதிடம் நவகிரகங்களை கொண்டு கணக்கிடப்படுகிறது. நவகிரங்களங்களில் ஒன்பது வகை இருக்கின்றன. அந்த ஒவ்வொரு நவகிரங்களுக்கும் ஒவ்வொரு வகையான ரத்தினக்கல் உள்ளன.
அவற்றில் ஓன்று தான் மாணிக்கம் கல். இந்த மணிக்கம் கல்லினை ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாணிக்க கல் பற்றிய சுவாரசியமான தகவலை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
மாணிக்கக் கல் – ரூபி கல் – Ruby Stone in Tamil:
இந்த மாணிக்க கல் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இது பூமியில் விளையக்கூடிய கல் ஆகும். ரோஸ் கலந்த சிப்பு நிறத்திலும், சுத்த சிவப்பு நிறத்தில் என இரு வகையில் கிடைக்கும் இந்த கல் ஒளிரும் மற்றும் ஒளிராத என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
இந்த மாணிக்க கற்களுக்கு வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நவரத்தின மோதிரம் அணியும் முறை
மாணிக்க கல் விலை:
மாணிக்கம் கற்கள் மிகுந்த உயர்தரமானது என்பதால் இதற்கு நிலையான விலை நிர்ணயம் என்பது இல்லை. இதன் காரணமாக தான் மாணிக்க கற்களை விலை இல்லா மாணிக்கம் என்று சொல்வார்கள்.
இந்த மாணிக்க ரத்தினக்கற்களை கேரட் முறையில் மதிப்பீடு செய்கின்றன. இருப்பினும் உண்மையான உயர் வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும்.
உயர் தரத்தில் இருக்கும் மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு சிப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும்.
மாணிக்க கல் கிடைக்கும் இடம்:
பொதுவாக இந்த மாணிக்க கற்கள் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. இந்தியாவில் தரம் குறைந்த மாணிக்க கற்கள், மற்றும் நல்ல அரிய வகையுள்ளமாணிக்க கற்கள் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது.
நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.
மாணிக்க கல் யார் அணியலாம்? – Ruby Stone Benefits in Tamil
இந்த மாணிக்க கற்களை யார் அணியலாம் என்றால் சூரியன் ஆதிக்கத்துக்கு ரூபி ரத்தினக்கல் அணிய வேண்டும். ஆக ஜாதகப்படி சூரியன் பலவீனமாக இருக்கும் ராசிக்காரர்கள் இந்த ரத்தினக்கல்லை அணிவது நல்லது. இந்தக் கல் அணிந்தபிறகு உங்களின் திறமை மேம்படுவதுடன், பல்வேறு நன்மைகள் உங்களை வந்துசேரும்.
மேலும் சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.
அதுமட்டுமின்றி, இதை அணிவதால், கண் சம்பந்தமான பிரச்சனைகள், இதய நோய்கள், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் விலகிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நவரத்தினங்கள் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் என்னென்ன..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |