குடியரசு தினம் கொடி ஏற்றும் முறை..!

Advertisement

Rules for Hoisting The National Flag
தேசிய கொடி ஏற்றும் விதிகள்

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது குடியரசு தினம் அன்று கொடி ஏற்றும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். மேலும் தேசிய கொடி ஏற்றுவதற்கென்று தனி விதி முறைகள் உள்ளது அதனை பற்றியும் தெரிந்துகொள்ள போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நாம் கொடி ஏற்றும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

குடியரசு தினம் 2024:

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புது தில்லியில், ஜன்பத்தில், இந்திய தேசிய ராணுவம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியை ஏற்றுவது பொதுவான நடைமுறை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடியரசு தினம் பற்றிய 10 வரிகள்

தேசிய கொடி ஏற்றும் விதிகள்

தேசிய கொடி

  • தேசிய கொடியை மேல் நோக்கி உயரமாக தான் பறக்கவிட வேண்டும்..
  • தேசிய கொடியை தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பார்க்க விட கூடாது.
  • நன்றாக இருக்கும் தேசிய கொடியை மட்டுமே பார்க்க விட வேண்டும்.
  • சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசிய கொடியை பறக்கவிட பயன்படுத்தக்கூடாது.
  • மற்ற கொடிகளுடன் சேர்ந்து பறக்கும் பொழுது தேசியக்கொடியை தாழ்வாக பறக்க விட கூடாது.
  • தேசிய கொடியை மேஜை விறுப்பாக பயன்படுத்தக்கூடாது.
  • ஜன்னல்களில் திரை செல்லையாகவோ தலையணை உறையாகவோ பயன்படுத்தக் கூடாது.
  • தேசிய கொடியின் மீது மலர்கள் உட்பட வேறு எந்த பொருட்களையும் வைக்க கூடாது.
  • தேசிய கொடியின் மீது மலர்களைக் கொண்டு அலங்கரிக்கவோ துவவோ கூடாது.
  • இருப்பினும் தேசிய கொடியை ஏற்றும் போது உள்ளே மலர்களை வைத்து கட்டலாம்.
  • தேசிய கொடி ஏற்றும் போது அது தலைகீழாக கட்டப்படக்கூடாது.
  • வாகனங்களின் பக்கவாட்டிலோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
  • தேசிய கொடியை குப்பைத் தொட்டியில் எறியவோ அல்லது பிற பொருட்களை கட்டுவதற்கான கயிறாகவோ பயன்படுத்தக்கூடாது.
  • மேலும் தேடிய கொடியை முக கவசமாக பயன்படுத்தக் கூடாது.
  • தேசிய கொடியை சட்டையின் இடது புறத்தில் மட்டுமே குத்திக் கொள்ள வேண்டும்.
  • தேசிய கொடியை பயன்படுத்திய பிறகு கசக்கியோ சுருட்டியோ வைக்க கூடாது. அவற்றை முறையாக மடித்து பத்திரமான இடத்தில் பாதுகாக்க வேண்டும்.

இந்திய நாட்டின் தேசிய கொடி அளவு எவ்வளவு?

இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் பத்தி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்.

தேசியக் கொடி பறப்பதற்கான நேரம் என்ன?

மூவர்ண தேசிய கொடி பயன்படுத்தும் விதிகளில் அரசு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. பழைய விதியின் படி சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டும் தான் நாட்டின் தேசிய கொடியை பறக்க விடலாம். இந்த விதியை மாற்றி இரவு நேரம் உட்பட 24X7 என அனைத்து நேரங்களிலும் தேசிய கொடியை பறக்க விட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் இதற்கு முன்னதாக இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கும், பாலிஸ்டர் துணிகளில் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது புதிய விதியின் படி, கையினாலோ, இயந்திரத்தினாலோ காட்டன், பாலிஸ்டர், சில்க் ஆகிய துணிகளில் தயாரிக்கப்பட்ட கொடிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடியரசு தினம் பற்றிய சுவாரசியமான தகவல்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement