ரயத்துவாரி பட்டா பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Ryotwari Patta in Tamil | ரயத்துவாரி என்றால் என்ன

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் பொதுவாக நாம் அனைவருமே ரயத்துவாரி பட்டா என்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் அந்த பட்டா எப்படிப்பட்ட நிலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த முறை எப்படி அறிமுகபடுத்தப்பட்டது. மேலும் இது எதற்காக அறிமுகம் செய்யப்பட்டது என்பதெல்லாம் தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் இவற்றை எல்லாம் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

ரயத்துவாரி முறை என்றால் என்ன..? | Rayathuvari Murai in Tamil:

Ryotwari patta details in tamil

  • ரயத்துவாரி என்பது பிரித்தானிய இந்தியாவில் விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் இரு முறைகளில் ஒன்றாக இருந்தது. 1833 செயிண்ட் ஹெலினா சட்டப்படி ரயத்துவாரி நிலவரி வசூலிக்கும் முறை துவங்கியது.
  • சென்னையை மற்றும் மும்பை மாகாணத்தில் தான் இது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ரயத்துவாரி முறையின் படி பிரித்தானிய அரசு காலத்தில் அரசு நிலத்தில் பயிரிடுபரிடுபவர்களிடம் இருந்து நேரடியாக வரி வசூலிக்கும் முறைக்கு தான் ரயத்துவாரி முறை என்று பெயர் ஆகும்.
  • அதாவது உழவர்களிடம் இருந்து நேரடியாக வரி வசூலிக்கும் முறை தான் ரயத்துவாரி முறை என்பது ஆகும். “ரயத்து” என்ற சொல்லுக்கு “உழவர்” என்பது பொருள். இம்முறையில் இடைத்தரகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

காலி மனை வரி என்றால் என்ன

  • அதாவது இந்த ரயத்துவாரி முறையில் பயிரிடுபவர் தங்கள் நிலத்திற்கான வரியை நேரடியாக அரசுக்குச் செலுத்தினர். தனது நிலத்தை அவர் நினைத்தவாறு விற்கவோ, அன்பளிப்பாகக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ முடிந்தது.
  • அதேபோல் விதிக்கப்படும் வரியை அவர் தவறாமல் செலுத்தி வரும் வரை சட்டப்படி அவரை அரசால் அவரது நிலத்திலிருந்து வெளியேற்ற இயலாது. மேலும் தான் பயிரிடும் நிலத்தின் அளவை நினைத்தபடி அதிகரிக்கவோ குறைக்கவும் உரிமை பெற்றிருந்தார்கள்.
  • பஞ்ச காலங்களிலும், விளைச்சல் குறைவான காலங்களிலும் விளைச்சலுக்கு ஏற்ப நிலவரி குறைத்துக் கொள்ளப்பட்டது.

ரயத்துவாரி பட்டா என்றால் என்ன..? | Ryotwari Patta Meaning in Tamil:

ரயத்துவாரி முறையில் வரி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஒரு நிலத்திற்கு வழங்கப்படும் பட்டா தான் ரயத்துவாரி பட்டா என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

பத்திரம் பிழை திருத்தம் செய்வது எப்படி

விடுதலைப் பத்திரம் என்றால் என்ன விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement