Salary Increment Request Letter in Tamil | Increment Salary Letter
நாம் சிறுவயதில் நமது பாடப்புத்தகத்தில் நிறைய விதமான கட்டுரைகளை படித்து வந்திருப்போம். என்னதான் நம் நாடு நாளுக்கு நாள் டிஜிட்டல் நோக்கி சென்றாலும், சில இடங்களில் நமக்கு தேவையானதை பெற கட்டுரை எழுதி தான் கொடுக்கின்றோம், எடுத்துக்காட்டாக Bank, இங்கே நமக்கு தேவையானது எதுவாக இருந்தாலும் அதனை ஒரு letter எழுதி தான் நமது கோரிக்கையினை அவர்களுக்கு தெரிவிக்கமுடியும். இதே போலத்தான் பள்ளிகளிலும், கல்லூரியிலும் ஏன் அலுவகளங்களில் கூட இந்த முறை தான் பின்பற்ற வருகின்றது.
இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது Letter for Increment in Salary in tamil அதாவது சம்பள உயர்வு கோரிக்கை கடிதம் பற்றி தான், என்னதான் நமக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் உள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தீர்கள் என்றால் இந்த பதிவில் கொடுத்துள்ள request letter for salary increment எழுதி உங்களது மேலிடத்திற்கு சமர்ப்பிக்கவும்.
சம்பள உயர்வு கோரிக்கை கடிதம்
சம்பள உயர்வு கடிதம் என்பது, ஒரு ஊழியர் தனது முதலாளி சம்பள உயர்வு கோரி எழுதும் அதிகாரப்பூர்வ கடிதம். இந்த கடிதத்தில் அவர்கள் இந்த அலுவலகத்திருக்காக என்ன செய்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்பு எந்த அளவில் இருந்தது என்றெல்லாம் கூறி சம்பள உயர்வு கோரிக்கை விடுப்பார்கள்.
காவல்துறை புகார் கடிதம் மாதிரி | Police Complaint Letter Format in Tamil
Request Letter for Salary Increment
இந்த format-ல் நீங்கள் கடிதம் எழுதி உங்களது சம்பள உயர்வு பற்றி உங்கள் மேலிடத்திற்கு தெரிவிக்கலாம்.
Salary Increment Request Letter Sample
உங்கள் பெயர் (ராஜா)
உங்களது அட்ரஸ் (12, அம்மாபேட்டை போலீஸ் காலனி, பின்புறம்)
ஊர்ப்பெயர் (அம்மாபேட்டை)
உங்கள் அலுவலக மேலாளர் பெயர் (குமார்)
அலுவலகத்தின் பெயர் (BBS)
தஞ்சாவூர்.
பொருள்: சம்பள உயர்வு கோரிக்கை கடிதம்
நான் ராஜா, மேலும் இந்த கடிதத்தில் சம்பள உயர்வு கோரிக்கை விதித்திருக்கின்றேன். நான் 13th Feb , 2022-லிருந்து உங்கள் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவிப் பொறியியலாளராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். எனது பணியில் நான் முழுமையாக ஈடுபாடுடன் செய்துள்ளேன், என்றும் என்னுடைய காலக்கெடுவை தவறவிட்டதில்லை.
நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஆதரவாக நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். எனது சாதனைகள், சாதனைப் பதிவு மற்றும் உங்கள் நிறுவனத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மதிப்பாய்வு ஊதிய உயர்வின் தேவையை ஆதரிக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 4.80 Lakhs ஆகும். இதனுடன் குறைந்தது 15% சம்பள உயர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருப்பேன்.
எனது இந்த சம்பள உயர்வு கோரிக்கையை ஒருமுறை பரிசீலித்து பாருங்கள்.
தங்கள் உண்மையுள்ள,
ராஜா
கையெழுத்து
Employee ID:
Phone no:
Salary Increment Request Letter Sample
உங்கள் பெயர்
உங்களது அட்ரஸ்
உங்கள் ஊர்ப்பெயர்
உங்கள் பள்ளி அதிபர்
பள்ளியின் பெயர்
ஊர்ப்பெயர்.
பொருள்: சம்பள உயர்வு கோரிக்கை கடிதம்
என் பெயர் அனாமிகா, நான் உங்கள் பள்ளியில் இரண்டு வருடங்களாக கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தை வைத்து ஊதியத்தை உயர்த்திக் கேட்க விரும்புகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது, பணி தொடங்கியதில் இருந்து இடைவிடாமல் இந்த பள்ளியில் வேலை செய்து வருகிறேன். எனது வேலையில் நான் மிகவும் பொறுப்பாக இருந்திருக்கிறேன், இங்கே நான் ஒவ்வொரு தேர்விற்கும் பாடத்திட்டத்தை உருவாக்குவதில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அதுமட்டுமின்றி பல பள்ளி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளேன். நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்திருக்கின்றேன், இதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறுகின்றேன்.
நீங்கள் எனது கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
நன்றி
அனாமிகா
கையெழுத்து
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |