Salmon Fish in Tamil | சால்மன் மீன் பயன்கள்

Advertisement

Salmon Fish in Tamil | சால்மன் மீன் தமிழ் பெயர்

மனிதனாக பிறந்த அனைவருமே இருக்கின்ற இடம் முதல் சாப்பிடுகின்ற உணவு வரை அனைத்தையுமே பார்த்து பார்த்து பண்ணுவோம். நாம் உடுத்து உடையாக இருந்தால் நிறம் மற்றும் விலையை பார்ப்போம். நமக்கு இந்த கலர் நல்லா இருக்குமா, விலை குறைவா இருக்கா அப்படின்னு மட்டும் தான் பார்ப்போம்.

அதுவே உணவாக இருந்த காரம் கம்மியா இருக்கு, எந்த கடையில காய்கறி வாங்கின அப்படின்னு மட்டும் தான் பார்ப்போம். ஆனால் ஒருவரும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எப்படி வந்தது, யார் தயாரிக்கிறார்கள் அதன் பெயர்கள் எப்படி வந்தது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். அதனால் தான் இன்றைய பதிவில் சால்மன் மீனை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.

Salmon Fish  in Tamil:

சால்மன் மீன் பற்றிய தகவல்

வடக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சால்மன் மீனின் பூர்விமாக இருக்கிறது. இது சால்மோனிடே குடும்பத்தின் கதிர்-துடுப்பு மீன் வகையாகும். ட்ரவுட், கிரேலிங் மற்றும் ஒயிட்ஃபிஷ் போன்ற சால்மன் போன்ற பல இனங்கள் ஒரே குடும்பத்தில் உள்ளன.

இந்த மீன் பொதுவாக நன்னீர் ஓடைகளில் குஞ்சு பொரிக்கும், குஞ்சுகள் பெரிதான பிறகு அவை கடலுக்கு இடம் பெயர்ந்து மீனாக மாறுகிறது. மேலும் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும் போது நன்னீருக்கு செல்கிறது.

சால்மன் மீன்களின் இனங்கள்:

  • அட்லாண்டிக் சால்மன்
  • சினுக் சால்மன்
  • சாம் சால்மன்
  • கோஹோ (வெள்ளி சால்மன்)
  • இளஞ்சிவப்பு (ஹம்ப்பேக் சால்மன்)
  • சாக்கி (சிவப்பு சால்மன்)
  • பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பகுதியை காணப்படும் மீன்கள் தான் உண்மையான சால்மன் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சால்மன் மீனின் தமிழ் பெயர்:

  • சால்மன் மீனை காலா மீன் என்பது தான் தமிழ் பெயராக இருக்கிறது.
  • மக்களால் தமிழில் கிழங்கான் மீன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அனைத்து வகையான சால்மன் மீன்களுக்கும் காலா மீன் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • அதுமட்டுமில்லாமல், சால்மன் மீன் தமிழ் பெயர் கதிர் வடிவ துடுப்பு கொண்ட மீன்களின் பொதுப் பெயராகும். “சல்மோன்” எனும் சொல் குதித்தல் என்ற பொருளுடைய “சல்மோ” என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது.

சால்மன் மீன் ஊட்டச்சத்துக்கள்:

  • சால்மன்  மீன்களில் அதிக அளவு புரதம் உள்ளதால் லீன் மீட் என்று அழைக்கப்படுகிறது. சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பி-12 வைட்டமின்கள், செலினியம் போன்ற சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அன்றாட வாழ்வில் மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

சால்மன் மீன் பயன்கள்:

ஒமேகா 3 நிறைந்துள்ள சால்மன் மீன்:

சால்மன் மீன் நன்மைகள் – ஒமேகா 3 (salmon omega 3 benefits) என்பது கொழுப்பு அமிலத்தினை சேர்ந்ததாகும். ஒமேகா கொழுப்பு அமிலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமில சால்மன் மீனை சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி, தோல் சம்பந்த பிரச்சனைகள், இதய நோய் போன்றவை வருவதை தடுக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்தம், அதிகமான கொழுப்புகள், மன அழுத்தம் பிரச்சனை, மூளை சம்பந்த நோய்கள் மற்றும் புற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க:

ஒமேகா 3 என்ற கொழுப்பானது நம் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற அமிலமாகும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே அந்த ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது கிடைக்கும். சால்மன் மீனில் எண்ணெய் பதம் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே அதில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது இருக்கும்.
சால்மன் மீன் சாப்பிட்டு வருபவர்களுக்கு தீராத நாள்பட்ட நீரிழிவு நோய் மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற நோயானது குணமாகும்.

அதிக உடல் எடையை கட்டுப்படுத்தும்:

சால்மன் மீன்களில் அதிக புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் புரதம் நிறைந்த சால்மன் மீனினை எடுத்துக்கொண்டால் உடல் மெலிந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பீர்கள்.
மேலும் சால்மன் மீனில் சிறு சிறு பயோ ஆக்டிவ் புரோடீன் மூலக்கூறுகள் உள்ளன. அவை மூட்டிலுள்ள குறுத்தெலும்புகளுக்கு, இன்சுலின் செயல்திறனுக்கு மற்றும் செரிமான தடத்தில் வீக்கம் போன்றவை வராமல் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.

பல நோய்களை விரட்டும் சால்மன் மீன்:

சால்மன் மீனில் வைட்டமின் பி 1, பி 2, பி 3 மற்றும் பி 5 போன்றவை அதிகளவு உள்ளன. சால்மன் மீனானது இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் அதில் ஏற்படும் பழுதை சரி செய்வது மற்றும் இருதயத்தில் ஏற்படும் வீக்கங்களை குறைத்துவிடும். முக்கியமாக சால்மன் மீனில் அதிகளவு வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி நிறைந்த சால்மன் மீன், எலும்பு பகுதி மற்றும் பற்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis) மற்றும் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

தாதுக்கள் நிறைந்த சால்மன் மீன்:

சால்மன் மீனில் அதிகமாக பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் செலினியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. பழ வகைகளில் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. ஆனால் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10% கூடுதலாக சால்மன் மீனில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். குறிப்பாக நம்முடைய உடலில் உபரி நீர் சேராமல் தடுக்கும்.

பாஸ்பரஸ் என்ற தாதுவானது எலும்பு மற்றும் பற்கள் பகுதியை நல்ல வலிமையாக வைத்திருக்கும். மேலும் சிறுநீரகம், இதய நோய்கள், தைராய்டு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். தாது சத்துக்கள் குறைந்த அளவில் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் மூலம் புற்றுநோய் உண்டாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement