Sardine Fish in Tamil
பொதுவாக பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக மீன் உள்ளது. இதில் பல வகைகள் இருக்கிறது. அதனாலேயே எல்லாரும் எல்லா மீன்களையும் சாப்பிட மாட்டார்கள். சிலருக்கு கெண்டை மீன் தான் பிடிக்கும், சிலருக்கு வஜ்ர மீன் தான் பிடிக்கும். இந்த மீன்கள் இரண்டு விதமாக வருகிறது என்று அனைவருக்கும் தெரிந்தது. அதாவது ஒரு கடலிலுருந்து வர கூடிய மீனானது கடற்பாசிகளை சாப்பிட்டு அதுவாக வளர கூடியது, மற்றொன்று தாமாக வளர்ப்பார்கள். உணவுகள் மற்றும் அவை சாப்பிடுவதற்கு என்றே தனியாக விற்கப்படும் பொருட்களை கொண்டும் வளர்க்கிறார்கள். ஒவ்வொரு மீனிற்கும் பல பெயர்கள் மற்றும் அதற்கென்று இனமெல்லாம் இருக்கிறது. அவற்றை பற்றியெல்லாம் நமக்கு தெரியாது. அதனால் தான் இன்றைய பதிவில் மத்தி மீன் பற்றிய தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
மத்தி மீன் பற்றிய தகவல்:
மத்தி மீன் இந்திய கடற்கரை பகுதியில் வாழ கூடிய மீன் இனமாக உள்ளது. இந்த மீனை தமிழகத்தில் உள்ள தென் கடலோர மக்கள். கேரளாவில் கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி சாப்பிடப்படும் மீன் இனமாக இருக்கிறது.
இந்த மீனை தமிழில் சாளை என்றும், மலையாளத்தில் மத்தி என்றும், தெலுங்கில் காவாலு என்றும், பெங்காலியில் கொய்ரா என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் சுவை அதிகமாக இல்லாமல் இருந்தாலும், இதனில் சத்துக்கள் அதிகமாகவே உள்ளது.
இந்த மீனானது எல்லா காலத்திலும் கிடைக்காது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிடைக்கும்.
100 கிராம் மீனில் உள்ள சத்துக்கள்:
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து -20.9 கிராம், கொழுப்பு- 10. 5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம் நீர்ச்சத்து- 66.7 கிராம் உண்டு.வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம், செலினியம், வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் இருக்கின்றது.
சாப்பிடும் முறை:
மற்ற மீன்களை எப்படி சுத்தம் செய்வீர்களா அதில் போல் தான் இதனையும் சுத்தம் செய்ய வேண்டும். இந்த மீனை குழம்பு, வறுவல் போன்றவை செய்து சாப்பிடலாம். வறுக்கும் போது முழு மீனை லேசாக கீறி விட்டு வறுக்கலாம் சுவையாக இருக்கும்.
மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |