சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதன் விளக்கம் | Sattiyil Irundhal Agapaiyil Varum Meaning
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று கூறுவதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முற்காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையினையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் பழமொழி வடிவில் நமக்கு எடுத்துரைத்துள்ளார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் வகுத்துச்சென்று பழமொழிகள் அனைத்தையும் வேறு விதமாக மாற்றி, அதற்கான அர்த்தத்தையும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
நாம் இன்று புரிந்திருக்கும் பல்வேறு பழமொழிக்கான அர்த்தங்கள் அனைத்தும் தவறான ஒன்று. அந்த வகையில், நாம் தவறாக புரிந்திருக்கும் பழமொழிகளில் ஒன்று “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” இதனை நாம் அனைவருமே தவறாகத்தான் புரிந்து இருக்கிறோம். ஆகையால், இப்பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
Sattiyil Irundhal Agapaiyil Varum:

வழக்கத்தில் உள்ள பழமொழி:
“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”
சட்டியில் என்ன இருக்கிறதோ அது தான் கரண்டியில் வரும் என்பது இந்த பழமொழிக்கான அர்த்தம் என்று கூறுகிறார்கள். ஆனால், அது தவறு. இதே பழமொழியை பல விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.
உண்மையான பழமொழி:
“சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”
இதுதான் உண்மையான பழமொழி ஆகும். காலப்போக்கில் இந்த பழமொழியை மாற்றி “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று கூறி வருகிறோம்.
சஷ்டி என்பதை மக்கள் சட்டி என்று மாற்றி கூறியுள்ளார்கள்.
உண்மையான அர்த்தம்:

சஷ்டியில் – முருகனுக்கு உகந்த நாள்.
இருந்தால் – விரதம்
அகப்பையில் – கர்ப்பபை
வரும் – குழந்தை கிடைக்கும்.
இதிலிருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கும். இந்த பழமொழிக்கான உண்மையான பொருள் என்ன என்று. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். இதுதான் இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தம் ஆகும். முருகப் பெருமானுக்கு உகந்த சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் அனுபவித்து பழமொழியாக கூறியுள்ளார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள், ஐப்பசி மாதம் வருகின்ற கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிப்பட்டால் குழந்தை வரம் கிட்டும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை பழமொழி விளக்கம்
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














