School Life vs College Life Which is Better
நம்மில் பலருக்கு படிப்பு என்ற சொல்லை கேட்டாலே பிடிக்காது. ஏனென்றால் எப்போது பார்த்தாலும் வீட்டில் படி படி என்றே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதனால் எப்போது விளையாட நேரம் கிடைக்கும் என்று தான் எதிர்ப்பாப்பார்கள். அதிலும் சிலருக்கு பள்ளி படிக்கும் போது கல்லூரி வாழ்க்கை தான் மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் கல்லூரி வந்த பிறகு பள்ளிப்படிப்பு தான் நன்றாக இருந்தது என்று நினைப்பார்கள். மற்ற சிலர் இந்த குழப்பத்துடனே இதுநாள் வரையிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் இன்று ஸ்கூல் வாழ்க்கை Vs கல்லூரி வாழ்க்கை இரண்டில் எது சிறந்தது என்றும், எதில் அதிகப்படியான மகிழ்ச்சி கிடைக்கும் என்று தான் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பள்ளி வாழ்க்கை:
பள்ளி வாழ்க்கை என்பது 1 முதல் 12-ஆம் வகுப்புகள் என ஒவ்வொரு வருடமும் நமது வகுப்பினை அதிகரிக்க செய்யும் ஒரு அமைப்பாக உள்ளது. இத்தகைய நிலையில் வகுப்பினை மட்டும் அதிகரிக்காமல் அறிவினையும் ஊக்குவிக்கிறது.
- பள்ளி வாழக்கை என்பது பலருக்கு பிடிக்காது ஒன்றாக ஆரம்பத்தில் இருக்கும். ஏனென்றால் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு நபரை பள்ளிக்கு போக சொன்னால் அதன் மீது ஒரு பயம் மற்றும் பிடிக்காத உணர்வு தான் அடுத்தபடியாக தோன்றும்.
- ஆனால் நமது வாழ்கைகைக்கும், நமது மூளையின் செயல்திறனை படிப்படியாக அதிகரிக்க செய்வது பள்ளி வாழ்க்கை தான்.
- படிப்பு என்ற ஒன்றைப்பற்றி தெரியாமல் இருக்கும் போது அதற்கான முதல் தளத்தை அமைத்துக்கொடுப்பதும் பள்ளி வாழ்க்கை தான்.
- பள்ளி பிடிக்கும் போதும் தேர்வுகளை கண்டு பயந்தாலும் கூட இனிமையான பொழுதாக ஒவ்வொரு வகுப்பிலும் அறிவை வளர்ச்சி அடையச்செய்வது பள்ளி வாழ்க்கை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
- அதேபோல் பொதுத்தேர்வின் மூலம் நமக்கான திறமையினை மதிப்பெண்கள் வழியாக வெளிப்படுத்துவதும் பள்ளி வாழ்க்கை தான்.
வீட்டிற்கு AC அல்லது Air Cooler இரண்டில் எது சிறந்ததாக இருக்கும் உங்களுக்கு தெரியுமா
கல்லூரி வாழ்க்கை:
கல்லூரி படிப்பு என்பது முதலில் 3 வருட UG படிப்பினையும், பின்பு 2 வருட PG படிப்பினையும், இதனை தொடர்ந்து 1 வருட M.phil படிப்பாகவும் இருக்கிறது. மேலும் இதில் பல வகையான படிப்புகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர் அவர் விருப்படி மட்டும் பிரிவினை எடுத்து படிக்கிறார்கள்.
- அந்த வகையில் நமது வாழ்க்கைக்கான அடுத்தக்கட்ட நிலையினை நமக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு நிலையாக கல்லூரி வாழ்க்கை அமைகிறது. ஏனென்றால் கல்லூரி படிப்பினை நாம் சரியான நிலையில் கற்றால் மட்டுமே வாழ்க்கை நல்ல நிலையில் அமையும்.
- அதேபோல் வேறு படங்களை மட்டும் கற்றுக்கொடுக்கலாம் ஒரு இடத்தில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என இதுபோன்ற ஒழுக்க நெறிகளையும் தெரியப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
- ஆனால் கல்லூரி வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சி என்பது இருக்கும். அதுவும் நண்பர்கள் வட்டாரத்துடன் இருந்தால் மகிழ்ச்சி என்பது நீடிக்கும் ஒன்றாக இருக்கும்.
- பள்ளி வாழ்க்கையை போல் இல்லாமல் இங்கு நம்மை யாரும் படிப்படி என்று வற்புறுத்த மாட்டார்கள். நமக்கான படிப்பினை நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
- கல்லூரியில் அளவற்ற மகிழ்ச்சி இருந்தாலும் கூட வாழ்க்கையில் நாம் என்ன நிலைக்கு வரப்போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஒரு இடமாக இருக்கிறது.
School Life vs College Life இரண்டில் எது சிறந்தது.?
பள்ளி வாழ்க்கையில் படிப்பிற்கான நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் கல்லூரியில் தேர்வுக்கு மட்டும் அதிகமாக படித்தாலே போதும். அந்த வகையில் பார்த்தால் கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சி, கிண்டல் என இவை அனைத்தும் அதிகமாக இருக்கும்.
எனவே பள்ளி வாழ்க்கை நாம் படிப்பில் மேல் நிலைக்கு செல்ல ஒரு அங்கமாக உள்ளது. கல்லூரி வாழ்க்கை அடுத்த வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம், என்ன வேலைக்கு சென்று எவ்வளவு பணம் சம்பாதிப்பது என்ற நமக்கான அங்கீகாரத்தை நோக்கி பயணம் செய்ய வைக்கிறது. ஆகவே இரண்டும் வாழ்க்கையும் சிறந்த ஒன்று ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |