மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | Senior Citizen Saving Scheme in tamil..!

Advertisement

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | Senior Citizen Saving Scheme in tamil..!

Senior Citizen Saving Scheme in tamil:- நம்மில் பலர் நம்முடைய எதிர்காலத்திற்காக சேமிக்கின்றோம், சேமிப்பதற்காக திட்டமிடுகின்றோம். அந்த வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் தங்களுக்கு ஒரு சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டமாக விளங்குகிறந்து.

அதாவது வங்கிகளைப் போன்ற அஞ்சல் நிலையமும் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு திட்டம் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு அஞ்சலக சேமிப்பு ஆகும். 60 வயதிற்கு மேற்ப்பட்ட தனிநபர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கை தொடங்கலாம்.

சரி இந்த பதிவில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்  பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். 

தபால் அலுவலக மாத வருமான திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அம்சங்கள் / senior citizen saving scheme post office:

 1. தபால் சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது.
 2. 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 60 வயதிற்கு குறைவான ஒரு நபர்  இந்த திட்டத்தில் சேரலாம்.
 3. அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
 4. தற்பொழுது இதன் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இருப்பினும் ஆண்டிற்கு ஆண்டு இதன் வட்டி விகிதம் மாறுபடும்.
 5. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி வருமானம் தங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
 6. ஆன்லைன் மூலமாக சேர்ந்துகொள்ளும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.
 7. நாமினி நியமிக்கும் வசதி உண்டு. கணக்கை முடிப்பதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் நாமினியை நியமித்து கொள்ளலாம்.
 8. இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல், அதிகபட்ச முதலீடாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
 9. ஒரு வைப்புதாரர் தனிநபர் அல்லது வாழ்க்கைத் துணைவருடன் (கணவன்/மனைவி) இணையாக ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம்.
 10. ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். ஆனால் முதலீடு உச்சவரம்பு 15 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் கணக்கு:

இந்த அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் படி  Account open செய்ய விரும்புபவர்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் Account open செய்யலாம்.

குறிப்பாக இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் படி படி Account open செய்த பிறகு, தமிழ்நாடு அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் Account-ஐ Transfer செய்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்:

 • வயது ஆதாரம்
 • கடவுச்சீட்டு
 • மூத்த குடிமக்கள் அட்டை
 • பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரின் எம்.சி / கிராம பஞ்சாயத்து / மாவட்ட அலுவலகம் வழங்கிய பிறப்பு சான்றிதழ்
 • பான் அட்டை
 • வாக்காளர் அடையாள அட்டை
 • ரேஷன் கார்டு
 • பள்ளியிலிருந்து பிறப்புச் சான்றிதழ் தேதி
 • ஓட்டுனர் உரிமம் 

திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும் திறக்கலாம். எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தை டெபாசிட் செய்ய வசதியாக சில தேசிய மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன.

வட்டி விகிதம்:

Senior Citizen Saving Scheme in tamil – தற்போது, இந்தச் சேமிப்புக் கணக்கிற்குச் சுமார் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. 1.4.2007 ம் தேதியில் இருந்து வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80C இன் நன்மைகள் இந்த தபால் நிலைய முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொன் மகன் சேமிப்பு திட்டம்

முதிர்வு தொகை அல்லது கணக்கை மூடும் முறைகள்:

senior citizen saving scheme details in tamil – ஒரு ஆண்டிற்கு முன்னர் வைப்புத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டுமெனில், மொத்த வைப்புத் தொகையின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதம் அபராதமாகச் செலுத்த வேண்டும். அதுவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பு நிதியைத் திரும்ப எடுக்க நினைத்தால் 1 சதவீத அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை.

முதிர்வு காலம்:

Senior Citizen Saving Scheme in tamil – மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடிவுற்ற பிறகு தங்கள் கணக்கை நீட்டிக்க விரும்பினால் மேலும் மூன்று வருடங்களுக்கு கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement