எள்ளை சாப்பிடுவதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Advertisement

Sesame Seeds in Tamil

ஒரு நாளைக்கு நாம் சமையலுக்கு என்று பார்த்தால் நிறைய பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் என இவற்றை எல்லாம் உபயோகப்டுத்துகிறோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு தன்மையினை கொண்டுள்ளது. அதாவது அதில் சத்துக்கள் முதல் அவற்றை சாகுபடி செய்யும் முறை என இவற்றை எல்லாமே வேறுபாட்டுடன் தான் காணப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய வீட்டில் எள்ளினை வைத்து சில ஆரோக்யமான உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் என செய்து கொடுப்பார்கள். முக்கியமாக சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் சாதம் வைப்பார்கள். இப்படி எள்ளினை பற்றி நமக்கு தெரியாத சில தகவல்களை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

எள் பற்றிய தகவல்:

 எள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தமிழகத்தில் பெரும்பாலும் அதிகமாக பயிர் செய்யப்படும் முக்கியமான பயிர் எள் ஆகும். இத்தகைய எள் ஆனது பெடலியாசியே என்ற குடும்பத்தினை சேர்ந்த ஒரு வகையான மூலிகை செடியாகும்.

மேலும் இந்த எள்ளில் காணப்படும் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதனுடைய மற்றொரு பெயர் திலம் என்பதாகும். அதுபோல இந்த எள்ளில் இருந்து உடலுக்கும், சமையலுக்கும் பயன்படுத்தக்கூடிய சுத்தமான நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

எள்ளில் உள்ள பிரிவுகள்:

  • வெள்ளை எள்
  • செம்மை எள்
  • கருமை எள்

எள்ளில் உள்ள சத்துக்கள்:

 எள்ளில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, கால்சியம், கார்போஹட்ரேட், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், கொலஸ்ட்ரால், மெக்னீசியம், தாமிரம், நார்சத்து, துத்தநாகம் மற்றும் கலோரிகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகிறது. 
கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

எள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

எள் பற்றிய தகவல்

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்வதற்கு எள்ளில் உள்ள சத்துக்கள் ஆனது மிகவும் நன்மையினை அளிக்கக்கூடியதாக உள்ளது.

நம்மில் பெருபாலானோருக்கு காணப்படும் தைராய்டு பிரச்சனையினை குணமடைவதற்கு எள் மிக சிறந்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் எள்ளில் உள்ள வைட்டமின் B6, துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் தைராய்டு ஹார்மோன்களை உருவாக்கி ஆரோக்கியமாக வாழச் செய்கிறது.

நாம் சாப்பிடும் உணவினை செரிமானம் ஆகச் செய்து செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை என எதுவும் வராமல் இருப்பதற்கு எள்ளில் உள்ள நார்ச்சத்தானது பயன்படுகிறது.

மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் துத்தநாக சத்தானது நம்முடைய எலும்புகளை வலுபெறச் செய்கிறது.

எள் தீமைகள்:

உடலில் அலர்ஜி உள்ளவர்கள் எள்ளினை சரியான அளவில் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் பெருங்குடல் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

மேலும் அளவுக்கு அதிகமாக எள் சாப்பிடுவதனால் வயிறு பிடிப்பு, மலச்சிக்கல், சர்க்கரையின் அளவினை அதிகரித்தல் மற்றும் வயிற்று வலியினை அதிகரித்தல் என பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

எள்ளினை வைத்து சாப்பிடுவதற்கு என்ன செய்யலாம்:

  1. எள் உருண்டை
  2. எள் மிட்டாய்
  3. எள் சாதம்
  4. எள் ரசம்
  5. எள் துவையல்

இதையும் படியுங்கள்⇒ கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement