செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன..? அதை ரத்து செய்ய முடியுமா..?

Advertisement

Settlement Pathiram in Tamil

தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாசகர்கள் அனைவரும் இந்த பதிவில் பத்திரங்கள் மற்றும் நிலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்று செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

செட்டில்மெண்ட் பத்திரம் என்று பலபேர் கூற கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன.? என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன.? என்பதை கொடுத்துள்ளோம்.

செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன..? 

செட்டில்மெண்ட் பத்திரம் என்பது குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்று சொல்லப்படுகிறது.  ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுப்பது ஆகும். அதாவது ஒருவர் உயிருடன் இருக்கும்போதே தன் சொத்துக்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது தான செட்டில்மெண்ட் பத்திரம் என்று சொல்லப்படுகிறது.  

செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும் தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோரை மட்டும் தான் குடும்ப உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்று கொள்கிறது.

குடும்ப உறுப்பினர் இல்லாதவருக்கு கொடுக்க நினைத்தால் அதற்கு “தானப் பத்திரம்” போட வேண்டும். இறந்த பிறகு செட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உயில் எழுத வேண்டும்.

பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தை வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா..? 

ஒருவர் தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. இதற்கு நிறைய வழக்குகள் உள்ளன. அதுபோல ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப வாங்க முடியாது.

ரத்து செய்யும் செட்டில்மெண்ட் பத்திரங்கள் நீதிமன்றத்திற்கு போகும் பொழுது நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கின்றது.

ஒருவரை ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ அவரிடம் இருக்கும் சொத்துக்களை தானமாக வாங்க கூடாது. மீறி இதுபோல செய்தால் ஏமாற்றி சொத்துக்களை தானமாக வாங்கியவர்களுக்கு பின்னாளில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படும்.

குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா..?

சொத்தை தானம் கொடுப்பவர் கவனிக்க வேண்டியவை: 

ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை மட்டும் தான் தானமாக கொடுக்க முடியும். பூர்வீக சொத்தை தானமாக எழுதி கொடுக்க முடியாது. சொத்தை தானமாக எழுதி கொடுக்கும் நபர் கண்டிஷன் போட்டு பத்திரம் எழுதுவது நல்லது.

அதுபோல தானம் பெறும் நபர் சொத்தை தானமாக வாங்கும் முன் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்று ஆலோசிப்பது நல்லது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement