செவிலியர் பற்றிய திருக்குறள்

Advertisement

செவிலியர் பற்றிய திருக்குறள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவிலியர் பற்றிய திருக்குறள் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க. செவிலியர் பணியை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 2 ஆம் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவ உலகின் உயிர்நாடியாக செயல்படுவது செவிலியர்கள் தான். தன்னை வருத்தி கொண்டு பிறரின் உடல் நலத்தில் அக்கறை கொள்பவர். எவ்வளவு இக்கட்டமான சூழ்நிலையாக இருந்தாலும் துணிவுடனும் அக்கறையுடனும் பணியாற்றுபவர்கள் செவிலியர்கள். இப்படி உலகின் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் செவிலியர்களை நாம் என்றும் போற்ற வேண்டும். செவிலியர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை திருக்குறள் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

சர்வதேச செவிலியர் தின வாழ்துக்கள் 2024

திருக்குறள்:

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

திருக்குறள் பொருள்:

உற்றவன் – உற்றவன் என்றால் நோய் உற்றவன். அதாவது நோயாளி.

தீர்ப்பான் – நோயை குணப்படுத்துவர். அதாவது மருத்துவர்.

மருந்து – உட்கொள்ளும் மருந்து

உழைச் செல்வான் – உழைச் செல்வான் என்றால் உடன் செல்வான் என்று அர்த்தம். அதாவது செவிலியர்.

அப்பால் – அவைகளே

நாற் கூற்றே – நாற் கூற்றே என்றால் நாளுமே என்று பொருள்படும்.

மருந்து. = மருந்து ஆகும்.

அதாவது, மருந்து என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, உடன் செல்வான் (செவிலியர்) என நன்கு கூறுகளை உள்ளடக்கியது ஆகும்.

உடன் செல்வான் (செவிலியர்):

உடன் செல்வான் என்றால் நோயாளியை கவனித்து கொள்பவர். அதாவது செவிலியர், உடன் இருப்பவர் , சுத்தம் செய்பவர் ஆகியோரை குறிக்கிறது. இவர்க இல்லாமல் மருந்து இல்லை. எனவே மருந்து பற்றி திருவள்ளுவர் திருக்குறள் மூலமாக நமக்கு எடுத்துரைத்துள்ளார்.

திருக்குறள்:

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

பொருள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.

மு.வரதராசனார் உரை:

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

செவிலியர் பற்றி இரண்டு வரிகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement