சதாவரி கிழங்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

shatavari in tamil

Shatavari in Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் சதாவரி கிழங்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம். மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, கருணை கிழங்கு, உருளை கிழங்கு, சேனை கிழங்கு இந்த வகைகளில் சதாவரி கிழங்கும் ஒன்று. அத்தகைய சதாவரி கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பலன்களை தருகிறது. உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தருகிறது. இத்தகைய சதாவரி கிழங்கை பற்றி இன்னும் நிறைய தகவல்களை அறிய தொடரை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

தண்ணீர் விட்டான் கிழங்கு பற்றிய தகவல்கள்:

தண்ணீர் விட்டான் கிழங்கு மருத்துவ பயன்

இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய நாடுகளில் உள்ள அஸ்பகரஸ் என்ற இனத்தை சேர்ந்த ஒரு வகையான கிழங்கு ஆகும். அஸ்பகரஸ் என்பது ஆங்கில பெயராகும்.

இந்த சதாவரி கிழங்கானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. 1 அல்லது 2 மீட்டர் இடைவெளியில் வளரக்கூடியது.

அதுபோல கடலுக்கும் மண்ணிற்கும் 1,300 மீட்டர் முதல் 1,400 மீட்டர் வரை இடைவெளியில் வளரும்.

 தண்ணீர் விட்டான் கொடியின் பூ மற்றும் கிழங்கு வெள்ளை நிறத்திலும் அதனுடைய காய் சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. 

தண்ணீர் விட்டான் கிழங்கு வேறு பெயர்கள்:

தண்ணீர் விட்டான் கிழங்கின் வேறுபெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சிக்குவை 
  • பறணை
  • உதகமூலம் 
  • சதாவேரி 
  • பீருதந்தி
  • நாராயணி
பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள்:

பெண்களுக்கு கருத்தரிப்பு தன்மையை அதிகரிக்கும் இந்த தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு இருக்கிறது.

கை, கால் வலி, உடம்பு வலி ஆகையவற்றைக்கு ஒரு நல்ல பலனை தருகிறது. இது ஒரு மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது.

இரத்த சோகை நோய் வராமல் தடுப்பதற்கு சிறந்த மருந்தாக தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி பயன்படுகிறது.

மாத விடாய் நேரங்களில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு வராமல் தடுக்கிறது. அதுபோல மாத விடாய் நிற்க போகும் கால கட்டத்தில் தினமும் உணவில் இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.

ஆண்கள் தண்ணீர் விட்டான் கிழங்கை சாப்பிடும் போது  டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனை சுரக்க செய்து ஆண்மை குறைவை போக்குவதற்கும் விந்து அணுக்களை அதிகரிக்க செய்வதற்கும் நல்ல பலனை தருகிறது.

மன அழுத்தத்தை போக்குவதற்கு ஒரு சிறந்த மூலிகையாக தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மை தருகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கு உடலில் உள்ள சூட்டை குறைத்து ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.

பசி உணர்வு இல்லாமல் இருப்பவர்கள் இந்த கிழங்கை சாப்பாட்டில் எடுத்து கொள்ளும் போது இயற்கையாகவே உங்களுக்கு பசி எடுக்க ஆரம்பமாகும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com