Shea butter என்றால் என்ன..?

Advertisement

 Shea Butter In Tamil

இந்த காலகட்டத்தில் அழகிற்காக நிறைய கிரீம்கள் மற்றும் சோப்புகள் பயன்படுத்துகின்றனர். அவைகளில் சில பயன் அளிக்கின்றன. சிலவகை அழகிற்காக பயன்படுத்தப்படும் க்ரீம்கள் எந்த வித மாறுபாடும் காட்டுவதில்லை. கோடை காலம் வந்துவிட்டால் சருமத்தை பாதுகாப்பது என்பது பெரிய வேலையாக உள்ளது. அந்த வகையில் இந்த சியா வெண்ணெய் சருமத்திற்கும் தலை முடிக்கும் நல்ல ஊட்டம் அளிக்கிறது. இந்த ஷியா வெண்ணெய் சருமத்தை பொலிவுபடுத்துகிறது. இது லோஷன் மற்றும் கிரீம் வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது.

ஷியா வெண்ணெய் என்றால் என்ன ?

மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஷியா மரங்களிலிருந்து பெறப்படும் பழத்தின் நட் கொட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கும் கொழுப்பு ஷியா வெண்ணெய் என அழைக்கப்படுகிறது. இந்த ஷியா வெண்ணெய் அழகிற்காக மிகவும் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இந்த ஷியா வெண்ணெயில் இருக்கின்றன. இது கிரீம் வடிவில் மக்களிடையே வணிகம் செய்யப்படுகிறது. இது ஆன்லைன்களிலும் விற்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் சமையலுக்காகவும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஸ்பூன் 13. 6 கிராம் ஷியா வெண்ணெயில் 120 கலோரிகள் மற்றும் 14 கிராம் கொழுப்புகள் காணப்படுகின்றன. மேலும் ஷியா வெண்ணெயை பற்றி அறிந்துகொள்வோம்.

ஷியா வெண்ணெய் நன்மைகள்

  • ஷியா வெண்ணெய் அழகிற்காக பங்களிக்கிறது. இது அனைத்து சரும வகையினருக்கும் ஒத்துப்போகிறது. லினோலிக், ஒலிக், ஸ்டீரிக் மற்றும் பால்மிடிக் அமிலங்கள் ஷியா வெண்ணெயில் இருப்பதனால் முகத்தில் எண்ணெய் பசை இல்லாத கொழுப்பு மற்றும் ஈரப்பதத்தை வழங்குகின்றன. 
  • ஷியா வெண்ணெய் வெளிப்புற சூழலினால் முகத்தில் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்துகிறது. 
  • ஷியா வெண்ணெயில் காணப்படும் கொழுப்பு தன்மையால் சருமத்தின் வறட்சி நீங்குகிறது. இதனை தோலின் மேல் தடவுவதால் சருமம் மாய்சரைசராக இருக்க செய்கிறது. 
  • ஷியா வெண்ணெயில் இருக்கும் எஸ்ட்டர்கள் தோல் அலர்ஜிகளை சரி செய்கின்றன. வறண்டு இருக்கும் தோலில் அரிப்பினால் ஏற்படும் எரிச்சலை தடுக்கிறது. 
  • ஷியா வெண்ணெய் உங்கள் சருமத்திற்கு அதிக ஈரப்பதத்தை வழங்குவதால் செல்களை புதுப்பித்து தோல் சுருக்கங்களை நீக்குகிறது. 
  • ஷியா வெண்ணெய் அனைத்து பூஞ்சை பாதிப்புகளையும் சரி செய்வதில்லை. ஆனால் காயத்தினால் ஏற்படும் பூஞ்சை தொற்றை சரி செய்கிறது. 
  • ஷியா வெண்ணெய் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை குறைக்க உதவுகிறது. 
  • ஷியா வெண்ணெய் கெலாய்டு தழும்பின் மேல் தடவுவதனால் நாளடைவில் அது மறைகிறது. கெலாய்டு ஒரு நீட்டித்த வடுவாகும். 
  • ஷியா வெண்ணெயை நீங்கள் கிரீம் மற்றும் லோஷனாக பயன்படுத்துவது அது சிறந்த சன் ஸ்க்ரீனாக சருமத்திற்கு விளங்குகிறது. இது சூரிய கதிர்களிலிருந்து உங்கள் தோலை பாதுகாப்பதால் உங்கள் சருமம் பொலிவுடன் காணப்படுகிறது.

 ஷியா வெண்ணையின் தலைமுடி நன்மைகள்:

இதுவரை முக அழகிற்கு மட்டும் பயன்படுவதாக தெரிந்த இந்த ஷியா வெண்ணெய் தலை முடியை பளபளக்க வைப்பதிலும் உதவுகிறது.

  • 2017 ஆண்டு ஆய்வில் ஷியா வெண்ணெய் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. 
  • இது தலைமுடியில் காணப்படும் பொடுகினை நீக்குகிறது. ஷியா வெண்ணெயில் காணப்படும் அடோபிக் டெர்மடிடிஸ் ஈரப்பத்தினை உச்சந்தலைக்கு தந்து பொடுகு வராமல் தடுக்கிறது. 
  • ஹேர் ஸ்ட்ரைட்னிங்கிற்கு இந்த ஷியா வெண்ணெய் உதவுகிறது. இதன் வழவழப்பு தன்மை முடியை நேராக்க செய்கிறது. ஹேர் ஸ்ட்ரைட்டாக உள்ளவர்கள் இதனை முடியின் அடிப்பதியில் பயன்படுத்தலாம். முடி வெடிப்பு இல்லாமல் பாதுகாக்கும்.

வெண்ணெய் பழம் பற்றிய தகவல்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement