Sheesham Wood in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிசே மரம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்து கொள்ளாலாம். Sheesham Wood பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அம்மரம் பற்றிய விவரங்கள் பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பெரும்பாலும், நமக்கு நிறைய மரங்கள் பற்றி தெரிவதில்லை. நாம் பயன்படுத்தும் மர பொருட்கள் எந்த மரத்தில் இருந்து செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரிவதில்லை. இந்த சீசம் மரத்தில் இருந்து பல்வேறு மரச்சாமான்கள் தயாரிக்கப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. ஓகே வாருங்கள், சீசம் மரத்தின் தமிழ் பெயர் என்ன.? இது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
சவ்வரிசியை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க
Sheesham Wood in Tamil Name:
- Sheesham Wood என்பது தமிழில் நூக்கம் (சீசம் மரம்) என்று அழைக்கப்படுகிறது. இது சிசே அல்லது தால்பெர்சியா சிசூ என்ற அறிவியல் பெயர் கொண்டது. இம்மரம் ஒரு வகையான ஈடிமரவகையாகும். அதுமட்டுமில்லாமல், இம்மரம் வட இந்திய ரோசுவுட் , சீஷம், டாலி அல்லது தால் மரம் மற்றும் இருகுடுசாவா என்றும் அழைக்கப்படுகிறது. இது பஞ்சாப் மாநிலத்தின் மணிலா மரமாகவும் திகழ்கிறது.
- இம்மரங்கள் 900 மீட்டர்கள் வரை வளரக்கூடியது ஆகும். இம்மரங்கள், ஒரு ஆண்டிற்கு 2,000 மில்லிமீட்டர்கள் வரையிலான மழையையும் 3 முதல் 4 மாத வறட்சியையும் தங்கும் தன்மை கொண்டது
- சிசே மரங்கள் மணல், ஆற்றங்கரை வண்டல் மண் போன்றவற்றிலும் வளரக்கூடியது. இது உப்புநீர் மண்ணிலும் வளரக்கூடியது. அத்திமட்டுமில்லாமல், கரையான் தாக்குதலையும், தங்கக்கூடியது ஆகும்.
- இம்மரம் 22 வருடங்கள் வளரக்கூடியது.
- 10°C முதல் 40°C வெப்பநிலையில் வளரக்கூடியது. தங்க பழுப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது செழுமையான மற்றும் பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.
Sheesham Wood in Tamil Uses:
- சீசம் மரங்கள் பெரும்பாலும் மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. கதவுகள், கட்டில்கள் மற்றும் ஜன்னல்கள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
- சமையலறை பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
- இதன் வேறு புகையிலை குழாய்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இது ஒரு நீடித்த மரம் ஆகும். இம்மரம் சிதைவதோ அல்லது பிளவுபடுவதோ இல்லை. அதனால், பல்வேறு மர பொருட்கள் செய்ய இம்மரங்கள் பயன்படுகிறது.
ஹேசல்நட் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |