மொபைல் அதிக நேரம் பயன்படுத்தினால் ஏற்படும் பின்விளைவுகள்..!

Advertisement

மொபைல் அதிக நேரம் பயன்படுத்தினால் ஏற்படும் பின்விளைவுகள்..! Side effects of mobile phone use

Side effects of mobile phone use:- இன்றை காலகட்டத்தில் மொபைல் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. அதாவது நண்பர்கள், உணவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்வது… என அனைத்துக்கும் அதிகளவு பயன்படுத்தும் செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் இவுலகில் மிக மிகக் குறைவு என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த செல்போன் தரும் ஆபத்துகளும் அளவிலாதது. சரி ஒருவர் அதிகநேரம் மொபையில் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை (side effects of mobile phone use) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க…

ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

Side effects of mobile phone use..!

பாதிப்பு: 1

ஒருவர் எவ்வளவு மணிநேரம் செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும்.

அதாவது ஒருவர் பயன்படுத்தும் செல்போன் மாடலை பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது.

இருந்தாலும் செல்போனை அதிகநேரம் உபயோகிக்கும் போது அதாவது செல்போனில்  அதிகநேரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொது ரேடியேஷன் அளவு அதிகரிக்கும் இதனால் முதலில் தலைவலி ஆரம்பிக்கும்.

பின் அதுவே புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சில ஆய்வுகள் கூறப்படுகிறது.

பாதிப்பு: 2

அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு.

எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கொள்ளலாம்.

பாதிப்பு: 3

பலர் செல்போன் பயன்படுத்தும் போது குனிந்த நிலையிலேயே அதிகநேரம் பயன்படுத்துவார்கள், இதனால் முதுகுவலி மற்றும் கழுத்து வலி அதிகம் ஏற்படும்.

சிலர் செல்போனை குனிந்த நிலையில் அதிகநேரம் பயன்படுத்தியதன் விளைவாக கூன் முதுகு விழுந்துவிடும், பின் இந்த பாதிப்பை சரிசெய்ய முடியாத நிலையில் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

எனவே இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க செல்போன் பயன்படுத்தும் போது நேராக அமர்ந்து செல்போனை கொஞ்சம் தொலைவில் வைத்து பயன்படுத்துங்கள்.

Android Tricks செல் போனில் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?

பாதிப்பு: 4

சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து, பயன்படுத்துவார்கள் இதனால் பிற்காலத்தில் அதாவது 30, 40 வயதில் காது கேட்கும் திறனை இழந்துவிடுவார்கள்.

எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது சவுண்டை 50 சதவீதம் குறைந்து பயன்படுத்துங்கள், இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.

பாதிப்பு: 5

பொதுவாக நாம் செல்போனை பயன்படுத்தும்பொழுது நம்மளுடைய கட்டை விரலைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். கட்டை விரலை அதிகநேரம் பயன்படுத்தும் பொழுது நமக்கு வலி அதிகமாக ஏற்படும். இந்த விஷயத்தை நாம் சாதரனமாக நினைத்துவிடக்கூடாது.

நம் உடலில் உள்ள எந்த பாகங்களாக இருந்தாலும் சரி அதற்கு நாம் அதிகளவு வேலைக்கெடுத்தோம் என்றால் கண்டிப்பாக அந்த பாகம் ஒருநாள் செயலிழந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே நாம் செல்போன் பயன்படுத்த நாம் கட்டைவிரலை தான் அதிகம் பயன்டுத்துவோம், இதனால் நமக்கு கட்டைவிரல் அதிகளவு வலி ஏற்பட்டு, இதனால் நம் கைகள் செயலிழந்து போக அதிகவாய்ப்புகள் உள்ளது. எனவே மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள்.

பாதிப்பு: 6

நம்மில் பலர் செல்போனில் படம் பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என்று சில பழக்கங்கள் இருக்கும். அதனால் நாம் செல்போனை அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருப்போம். இதனால் நமக்கு கண்கள் சிவந்து போய்விடும் இதன் காரணமாக பார்வை திறன் குறைந்து விடும்.

இந்த பிரச்சனைமட்டும் இல்லாமல் இரவில் தூக்கமின்மை பிரச்னையும் வந்துவிடும். எனவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தயவுசெய்து செல்போனை பயன்படுத்தும் நேரத்தையாவது குறைத்து கொள்ளுங்கள்.

இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

பாதிப்பு: 7

ஒருவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் பொழுது ஞாபக மறதி அதிகமாக ஏற்படும். செல்போன் அதிகம் பயன்படுத்தும் பொழுது மூளையின் யோசிக்கும் திறன் குறைகிறது, இதனால் ஞாபக மறதி அதிகரிக்கிறது.

பாதிப்பு: 8

நம்மளில் பலர் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இது. அதாவது நம்மளிடம் செல்போன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

அதாவது காலையில் எழுந்தவுடன் முதலில் செல்போனில் தான் முழிப்பது, நாம் எங்கு சென்றாலும் நம்மலுடன் செல்போனையும் எடுத்து செல்வோம்.

குறிப்பாக நம்மலுடன் யாரும் இல்லை என்றாலும், கவலைப்பட மாட்டோம் ஆனால் நம்மலுடன் செல்போன் இருந்தால் போதும் என்று நினைப்போம்.

இது மிகவும் தவறான எண்ணமாகும், இந்த நிலை நீடித்துக்கொண்டே சென்றால் நம்மை சைக்கோ நிலைக்கு கொண்டு செல்லும்.

எனவே செல்போனை தேவைக்காக மட்டும் பயன்படுத்துங்கள், தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினோம் என்றால் இதுபோன்ற தேவையில்லாத பல பிரச்சனைகளை நாம் தான் சந்திக்கவேண்டியதாக இருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement