Simple Dot One Electric Scooter Price
இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை என்பது இருக்கும். அப்படி இருக்கும் தேவைகளில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வண்டி என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது. அதாவது, பைக், கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல், அதற்காக முயற்சிகளையும் எடுத்து வருவார்கள். இந்த அவசர காலகட்டத்தில் சரியான நேரத்திற்கு வேளைக்கு செல்வதற்கும், கல்லூரிக்கு செல்வதற்கும் ஒரு வாகனம் அவசியமாக தேவைப்படுகிறது.
அதனால், பெரும்பாலானவர்கள் ஸ்கூட்டி மற்றும் பைக் போன்றவற்றை வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வருவார்கள். அதுமட்டுமில்லாமல், சந்தையில் புதிதாக என்ன ஸ்கூட்டி வருகிறது, என்ன பைக் வருகிறது என்றெல்லாம் பார்த்து வருவார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் புதிதாக அறிமுகமாகும் Simple Dot One Electric Scooter -யின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இப்பதிவில் விவரித்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Simple Dot One Electric Scooter Specifications in Tamil:
நீங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டியை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் எடை 126 கிலோ ஆகும். டாட் ஒன் முன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குடன் வருகிறது. சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட், பிரேசன் பிளாக், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. டாட் ஒன் 750W சார்ஜருடன் வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.77 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தில் வரை செல்லும் வகையில் சூப்பரான செயல்திறனும் வருகிறது. இது IDC இல் 160 கிலோமீட்டர்களை வழங்குகிறது, மேலும், மிக நீண்ட தூர கொண்ட E2W ஆகும்.
ஹோண்டாவுல ஸ்கூட்டி வாங்கணுமா உங்களுக்கானது தான் தாங்க..
இதன் வடிவமைப்பை பொறுத்தவரை 12 இன்ச் சக்கரங்கள் 90-90 டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் உள்ளது. முக்கியமாக ஸ்கூட்டி நல்ல உழைப்பை தரும் வகையில் 3.7 kWh பேட்டரி திறன் மற்றும் 8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு வருகிறது.இந்த ஸ்கூட்டரை 3 மணி 47 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது.
விலை மற்றும் வெளியீட்டு தேதி:
சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டியின் விலை முன்னதாக ரூ.1 லட்சம் என்று கூறப்பட்ட நிலையில் அது ஃபிளாக்ஷிப் சிம்பிள் ஒன்னுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, சிம்பிள் டாட் ஒன் ரூ.1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த ஸ்கூட்டரை ஜனவரி 27 ஆம் தேதி முதல் ரூ.1,947 டோக்கன் முறையில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டி 60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்.. என்ன மாடல் தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |