20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..! Simple Kitchen Tips in Tamil..! Samayalarai Tips in Tamil..!

Simple Kitchen Tips in Tamil

20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..! Simple Kitchen Tips in Tamil..! Samayalarai Tips in Tamil..!

சமையலறை டிப்ஸ்: அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய சிறந்த சமையல் அறை டிப்ஸ்.. இங்கு கொடுக்கபட்டுள்ளது அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

20 சிறந்த சமையல் அறை குறிப்பு..! சமையலறை டிப்ஸ்..! 

 டிப்ஸ் 1:

வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

 டிப்ஸ் 2:

சமையலறை டிப்ஸ்: ஒரு டம்பளர் தண்ணீரில் நான்கு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

 டிப்ஸ் 3:

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரங்கள் கறுப்பாவதை தடுக்கலாம்.

 டிப்ஸ் 4:

குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றி பூ வைத்தால் கீழே விழாது.

துணிகளில் எண்ணெய் கரையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் வீட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

 டிப்ஸ் 5:

எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

உப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..!

 டிப்ஸ் 6:

உங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும், ஓட்டை அடைபடும்.

 டிப்ஸ் 7:

எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.

 டிப்ஸ் 8:

சமையலறை டிப்ஸ்: ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக இருக்கும்.

 டிப்ஸ் 9:

பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்க கூடாது.

சமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..!

 டிப்ஸ் 10:

பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பாக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

 டிப்ஸ் 11:

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள், காய்கறிகள் வாடாமல் இருக்கும்.

 டிப்ஸ் 12:

சமையல் அறை டிப்ஸ்: பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

 டிப்ஸ் 13:

அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியை தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டு தேய்க்க வேண்டும்.

 டிப்ஸ் 14:

இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

 டிப்ஸ் 15:

சமையல் அறை டிப்ஸ்: காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.

 டிப்ஸ் 16:

வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.

 டிப்ஸ் 17:

பூண்டு உரிப்பதற்கு பலரும் சிரமப்படுவார்கள். பூண்டினை சுலபமாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு உரித்தால் பூண்டு தோலினை எளிமையாக உரிக்கலாம்.

 டிப்ஸ் 18:

பிஸ்கட்டுகள் நமுத்து போகாமல் இருப்பதற்கு மெல்லிசான துணியில் சிறிதளவு சர்க்கரை போட்டு, மூட்டை போன்று கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டால் பிஸ்கட் நமுத்து போகாமல் இருக்கும்.

 டிப்ஸ் 19:

வீட்டில் கொசு, பூச்சிகள் வராமல் இருக்க பேகான் ஸ்ப்ரே பாட்டிலுக்குள் ஊதுபத்தியை போட்டு எடுத்து, பிறகு ஏற்றி வைக்கலாம்.

 டிப்ஸ் 20:

வீட்டில் எறும்பு வராமல் இருப்பதற்கு சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்பு துண்டுகள் போட்டால் எறும்பு அண்டாது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil