Sitting Position PersonalityTest in Tamil
வணக்கம் நண்பர்களே.! நம்மை நாமே தெரிந்து கொள்வதற்கு ஆர்வாமாக இருப்போம். உங்களுடன் பழகுவர்களுடன் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். உங்களை பற்றி மற்றவர்கள் சொல்வதை விட நீங்களே உங்களை பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா..! உங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு பல விதங்களில் பொதுநலம். காம் பதிவில் பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் நீங்கள் உட்காரும் நிலையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
முழங்கால்ககளை நெருக்கி வைத்து அமருபவர்:
நீங்கள் புத்தி கூர்மையுடன் காணப்படுவீராகள். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் யோசித்து சரியான முடிவை எடுப்பீர்கள். நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த நேரத்தில் ஒருவரை சந்திக்க வேண்டுமென்றால் அந்த நேரத்திற்கு சரியாக செல்வார்கள். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். ஏதாவது பிரச்சனை நடக்கிறது என்றால் அந்த பிரச்சனைக்கான சரியான முடிவை எடுப்பதில் வல்லவராக இருப்பீர்கள். மற்றவர்கள் ஒருவரை பற்றி சொல்கிறார்கள் என்றால் அதை அப்படியே கேட்க மாட்டார்கள். அதில் எது உண்மை , எது பொய் என்று ஆராய்ந்து கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால் வதந்திகளை நம்ப மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் தலை முடி இப்படி உள்ளது என்றால் நீங்கள் இப்படி பட்டவர்கள் தான்..!
கால் மேல் கால் போட்டு அமருபவர்கள்:
இவர்களிடம் கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். கலை மீது ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை பற்றி கற்பனை செய்து கொண்டு தான் செய்வார்கள். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி அவர்களை வழி நடத்துவதில் சிறந்தவராக இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால் ஆளுமை பண்பு நன்றாக இருக்கும்.
முட்டிகளை விரித்து அமருபவர்கள்:
முட்டிகளை விரித்து அமருபவர்கள் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த செயலையும் நம்பிக்கையாக செய்வார்கள். இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைக்க கூடியவர்கள். மற்றவர்கள் இவர்களுடன் சொல்லும் விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். அது போல இவர்களின் விஷயத்தையும் மற்றவர்களுடன் சொல்ல மாட்டார்கள். உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கால் மேல் கால் போட்டு அமருபவர்கள்:
இவர்கள் செய்யும் வேலையை மற்றவர்கள் உன்னால் முடியாது என்று சொன்னாலும் நம்பிக்கையாக செய்வார்கள். அவர்கள் சொல்வதை காதிலே வாங்கி கொள்ள மாட்டார்கள். எந்த செயலையும் பொறுமையாக செய்வார்கள். இவர்களின் இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைப்பார்கள். அழகாக ஆடைகள் அணிய வேண்டும் என்று நினைப்பார்கள். கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
கால்களை விரித்து அமருபவர்கள்:
இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பேசுவது தான் சரி என்று நினைத்து பேசுவார்கள். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் இருக்காது. செய்யும் வேலைகளை சரியாக செய்ய மாட்டார்கள். ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலை வந்தால் அதை அப்படியே விட்டு விட்டு செல்வார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |