உறக்கத்திற்கு ஏற்ற பாய்
தூக்கம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தூக்கம் இல்லையென்றால் நாம் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. உடல் சோர்வாக காணப்படும். பசி இருக்காது, எதிலும் பெரிதும் ஈடுபாடு இருக்காது. இதனால் எரிச்சல் அடைவீர்கள். யார் ஏதும் கேட்டால் முகத்தில் அடித்தது மாதிரி பேசுவீர்கள். நிறைய கோபம் வரும். ஒரு நாள் இரவு பொழுது தூங்காமல் இருந்தால் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் தினமும் 8 மணி நேரம் தூங்குங்கள். இந்த பதவில் உங்களுக்கு உதவிடும் உறக்கத்திற்கு ஏற்ற பாய் எது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
எந்த பாய் நல்லது:
நம் முன்னோர்களின் காலத்தில் தரையில் பாய் விரித்து தான் தூங்கினார்கள். இதனால் அவர்கள் இரவு நன்றாக தூங்கினார்கள், உடலுக்கும் குளிர்ச்சியையும் கொடுத்தது. ஆனால் இன்றைய காலத்தில் பெட்டில் தான் படுத்து உறங்குகிறார்கள். இந்த பாயில் தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் பெட்டில் படுத்து உறங்குகிறார்கள். பிறந்த குழந்தையை கூட பெட்டில் தூங்கும் பழக்கத்தை கொடுக்கிறார்கள். இந்த பெட்டில் படுக்கும் போது குழந்தைக்கு உடல் சூடு உண்டாகிறது. அதனால் சீக்கிரம் தூங்குகிறார்கள். இப்படி தூங்குவது நல்லதாக இருந்தாலும் அவர்கள் இதனை பழகி கொள்கிறார்கள். இதனால் அவர்கள் எங்கே சென்றாலும் பெட் இல்லாமல் தூங்க மாட்டார்கள்.
நம் வீட்டில் முன்னோர்கள் இருந்தால் பாயில் தூங்க வைத்து பழக்கப்படுத்தி கொண்டு இருப்பார்கள். ஆனால் இதனை இந்த காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் கேட்டு கொள்வதில்லை. அதனால் தான் இந்த பதிவில் ஒவ்வொரு பாயில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
பாயில் பல வகைகள் இருக்கிறது, நார் பாய், நரம்பு பாய், பிளாஸ்டிக் பாய் என்று பல வகைகள் இருக்கிறது.
மூங்கில் பாய்:
மூங்கில் பாயில் படுத்து உறங்குவதால் உடலின் சூட்டை அதிகரிக்க செய்யும். ஏற்கனவே உங்கள் உடலில் சூடு அதிகமாக இருந்தால் இந்த பாயில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
பிரம்பு பாய்:
பிரம்பு பாயில் படுத்து தூங்குவதால் உங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. உங்களது உடலில் சூடு அதிகமாக காணப்பட்டு இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் பிரம்பு பாயில் படுத்து உறங்குங்கள்.
பிளாஸ்டிக் பாய்:
பிளாஸ்டிக் பாயில் படுத்து உறங்குவது உங்களது உடலிற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் இந்த பாயில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
கோரை பாய்:
கோரை பாயில் படுத்து உறங்குவது உடலிற்கு ஏற்றதாக இருக்கிறது. அதனால் இந்தபாயில் படுத்து தூங்குங்கள்.
தாழம்பூ பாய்:
தாழம்பூ பாயில் படுத்து தூங்குவதால் உடலில் உள்ள பித்தத்தை குறைக்க செய்கிறது. அதனால் உங்களுக்கு பித்தம் இருந்தால் இந்த பாயில் தூங்குங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |