வாட்சப் தமிழ் அர்த்தம்
நம் தாய்மொழியான தமிழை அனைவருக்கும் பிடிக்கும். அதில் நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தமிழில் தான் பேசுகிறோம் என்றால் இல்லை. ஆமாங்க நாம் யரும் தமிழ் மொழியில் பேசுவதில்லை. நாம் பேசும் போது தமிழில் தான் பேசுகிறோம், ஆனால் சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்தும் தமிழ் இல்லை. பேசுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் அல்லது நாம் பயன்படுத்தும் அனைத்திற்கும் தமிழ் பெயர் தெரியாது. அதனால் இன்றைய பதிவில் பயன்படுத்தும் வாட்சப், ட்விட்டர் போன்றவற்றிற்கு தமிழ் பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..
cctv தமிழ் பெயர்:
cctv இல்லாத இடமே இல்லை. வீடுகள், கடைகள், தெருக்கள், பள்ளிகள், கல்லூரி போன்ற எல்லாவற்றிலும் cctv கேமரா இருக்கிறது. ஆனால் இவற்றை cctv கேமரா என்று தான் சொல்வோம். இதனின் தமிழ் பெயர் மறைக்காணி.
சிம் கார்டு:
போன் பேசுவதற்கு முக்கியமாக இருப்பது சிம் தான். இது இல்லையென்றால் நாம் போனில் ஒன்றுமே பேச முடியாது, பார்க்க முடியாது. இப்படி போனிற்கு முக்கியமாக இருப்பதை சிம் கார்டு என்று கூறுவோம். ஆனால் இதனுடைய தமிழ் செறிவட்டை.
லொகேஷன்:
நாம் ஏதவாது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் வழியை சொல்லு என்று சொல்வோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாரிடமும் போன் உள்ளது அதனால் லொகேஷன் ஷேர் செய் என்று கூறுகிறோம். இதற்கான தமிழ் பெயர் தடங்காட்டி.
ட்விட்டர்:
உலகில் நடக்க கூடிய செய்திகளை தெரிந்து கொள்வதற்கு ட்விட்டர் உதவியாக இருக்கிறது. அதனாலேயே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதனுடைய தமிழ் பெயர் கீச்சகம்.
இன்ஸ்டாகிராம்:
பெரும்பாலானவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். உலகில் நடக்க கூடிய செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கிறது. இதனுடைய தமிழ் பெயர் பட வரி.
You Tube:
மனிதர்களின் பொழுது போக்ககாகவும், தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் You Tube உதவியாக இருக்கிறது. இதனுடைய தமிழ் பெயர் வலையொளி.
வாட்சப்:
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் வாட்சப் பயன்படுத்துகின்றனர். இதனுடைய தமிழ் பெயர் புலனம்.
டெலெக்ராம்:
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டெலெக்ராமையும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதனின் தமிழ் பெயர் தொலைவரி.
பேஸ் புக்:
பேஸ் புக்கில் தெரியாத நபர்களுடன் நட்பு கிடைக்கிறது. பல பயனுள்ள தகவலும் பரிமாறப்படுகிறது. இதனை தமிழ் பெயர் முகநூல்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |