தூக்கத்தில் திடீர் என்று உளறுபவரா நீங்கள்..! அப்போது இந்த பதிவை படிங்க..!

Advertisement

தூக்கத்தில் திடீர் என்று உளறுபவரா நீங்கள்..! அப்போது இந்த பதிவை படிங்க..!

மனிதனுடைய மனமும், உடலும் அமைதியாக இருக்கும் ஒரே நேரம் இரவு உறங்கும் நேரம் தான். பொதுவாக இரவு உறங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனை என்றால் அது குறட்டை விடும் பிரச்சனை தான். அனால் இந்த பிரச்சனை மட்டும் இல்லாமல் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது அது தான் தூக்கத்தில் திடீர் என்று உளறுவது தான். இன்றைய காலத்தில் சில இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சனையில் ஒன்று தான் தூக்கத்தில் உளறுவது. இதன் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்ன. ஏன் இந்த பிரச்சனை வருகிறது என்பதை பற்றி இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

ஒரு சிலர் தூங்கும் போது யார்கிட்டயோ பேசுவது போல் மிக தெளிவாக பேசுவார்கள். ஒருசிலருடைய பேச்சி தூக்கத்தில் தெளிவு இல்லாதது போல் இருக்கும்.  மேலும் சிலர் தூக்கத்தில் பேசுவது எப்படி இருக்கும் என்றால் அது வெறும் முனங்கல் சத்தமாக தான் இருக்கும். இது போன்று மனிதன் தூக்கத்தில் ஏற்படும் அனைத்துமே Somniloquy அதாவது தூக்கத்தில் செய்யும் அனைத்து செயல்களையும் அசாதரண செயல் என்று சொல்வார்கள்.

காரணம் – Somniloquy Meaning in Tamil:

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் சோர்வு, மன அழுத்தம், மதுப்பழக்கம் இது போன்று பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதுமட்டும் இல்லாமல் மரபு ரீதியாக கூட இந்த பிரச்சனை ஒருவருக்கு 90% வரலாம்.

தூக்கத்தில் பேசுபவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள், அவர்கள் பேசுகிறார்களா இல்லையா என்று தெரிய வாய்ப்பே இல்லை. காலையில் எழுந்த பிறகு அவர்களிடம் யாராவது சொன்னால் தான் தெரியும்.

தூக்கத்தில் அவர்கள் பெரும்பாலும் அன்றைய நாள் நடந்த விஷயங்களை பற்றி அல்லது தூக்கத்தில் வரும் கனவுகளை பற்றி தான் பேசுவர்களாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாத்திரை அட்டையில் இடைவெளி இருப்பதற்கான காரணம்

யாருக்கெல்லாம் எந்த பிரச்சனை வருகிறது:

தூக்கத்தில் யாரெல்லாம் அதிகமாக பேசுகின்றன என்றால் பெண்களை விட ஆண்களும், குழந்தைகளும் தான் பேசுகின்றன என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக 3 வயது குழந்தை முதல் 10 வயதுள்ள குழந்தைகள் தான் தூக்கத்தில் உளறுகின்றன.

இருப்பினும் இளைஞர்களுக்கு இந்த பிரச்சனை வருகிறது என்றால் அவர்களுக்கு இருக்கு ஒருவிதமான பயம் தான். இந்த பயம் தான் அவர்களது மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக தூக்கத்தில் உளறவும் செய்கின்றன. இது மனநல பிரச்சனையாகவும் மாறுகிறது.

எதனால் ஏற்படுகிறது?

நாம் தூங்கும் போதும் நமது மூளை Rabbit Eye Movement (REM) என்கிறன நிலைக்கு செல்கிறது. அந்த நிலையில் தான் நமக்கு கனவுகளும் வருகிறது. இந்த நிலையில் தான் நமக்கு Sleeping Paralysis-ம் ஏற்படுகிறது. Paralysis என்பது நமது உடமைப்பை முடக்கும் ஒரு செயல் ஆகும். நாம் ஆழ்ந்து தூங்கும் போது Paralysis உலகில் தான் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பஸ்ல போகும் போது ஏன் வாந்தி வருகிறது தெரியுமா..?

அதாவது நாம் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவிதமான Paralysis கெமிக்கல் சுரக்கிறது Paralysis உலகில் தான் நாம் இருப்போம். இப்படி இருக்கும் போது நமக்கு கனவு வருகையில் அந்த கனவிற்கு நாம் எதுவும் ரியாக்ட் செய்திட கூடாது என்பதற்காகத்தான் Sleeping Paralysis-ற்கு செல்கிறோம். இருந்தாலும் ஒரு சிலரால் மட்டும் எப்படி பேச முடிகிறது என்றால் ஒரு சில நேரங்களில் மட்டும் இந்த கெமிக்கல் தொண்டை பகுதியில் மட்டும் வேலை செய்யாமல் போய்விடும். அப்படி இருக்கும் போது மட்டும் தான் நம்மால் பேச முடியும்.

இந்த பிரச்சனை தொடர்ந்து ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்கள் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் உள்ளார்கள் என்று அர்த்தம் ஆகும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement