காமராஜர் பாடல்கள் | Karmaveerar Kamarajar Songs Lyrics in Tamil

Advertisement

காமராஜர் பாடல்கள் | Kamarajar Padalgal | Kamarajar Song Lyrics in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் பற்றிய பாடல்கள் (Kamarajar Song Lyrics in Tamil) பற்றி விவரித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராஜர். இவரை காமராஜர் என்று சொல்வதை விட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் என்று அன்பாக அழைப்பார்கள். இவர் நம் நாட்டிற்காக செய்த விஷயங்களை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். நாம் இந்த தொகுப்பில் பாரதத்தின் விடுதலைக்காக உதவிய பெருந்தலைவர் காமராஜர் பாடல் வரிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

காமராஜர் பாடல் வரிகள் | Kamarajar Pattu in Tamil:

விருதுநகர் தன்னிலே

வீரம் விளைந்த மண்ணிலே

விளைந்த பயிராம் காமராசர்!

இளவயதுக் கல்வியை

இழந்துவிட்ட போதிலும்

மனதின் வலிமை தன்னையே

மறந்து விட்டதில்லையே!

பத்திரிக்கை வாயிலாக

தெரிந்து கொண்டார் உலகினை!

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

முதல் அமைச்சராய் வந்தாரே!

வந்தபின்னர் ஓயவில்லை!

உறங்கவில்லை!

தொண்டு பல செய்தாரே!

தொடர்ந்து பல திட்டங்கள் தீட்டி

தொழில்துறையை வளர்த்தாரே!

ஏழைக்குழந்தையும்

ஏட்டுக் கல்வி பெற்றிட

இலவச உதவிகள் செய்தாரே!

கல்விக் கண்ணை திறந்தாரே

கடமையே கண்ணாக வாழ்ந்தாரே!

கண்டதில்லை இவரைப் போல்

கனிவு மிக்க தலைவரை!

உழைத்து உழைத்து ஓய்ந்ததால்

கடவுள் கொடுத்த ஓய்வினை

விரும்பி ஏற்று பறந்தாரே!

விண்ணுலகம் சென்றாரே!

காமராஜர் பொன்மொழிகள்

காமராஜர் பற்றி குழந்தை | Kamarajar Kulanthai Padalgal:

அன்பு உள்ளம் கொண்டவர்

அருமை காமராஜராம்

எல்லாரும் படிக்கவே

ஏற்ற வழி செய்தவர்.

பள்ளி செல்லும் பிள்ளைகள்

கால் வலிக்க நடக்காமல்

பக்கத்திலே படித்திட

பள்ளிகளைத் திறந்தவர்.

படிக்கும் நல்ல பிள்ளைக்கு

மதிய உணவு தந்தவர்

ஒரே நிறத்தில் சீருடை

ஒன்றாய் அணியச் சொன்னவர்.

காந்தி வழி நின்றவர்

உத்தமராம் காமராஜர்

நினைவை என்றும் போற்றுவோம்

பிள்ளைகளே வாருங்கள்!

தமிழ் மொழி பற்றிய சுவாரசியமான தகவல்கள்

காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement