ஸ்பைருலினா பாசி பற்றி தெரியுமா உங்களுக்கு.?

Advertisement

Spirulina in Tamil

நாம் பொதுவாக சாப்பிடும் பொருள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு அதனை சுவை எப்படி இருக்கிறது என்று தான் உணர்வோம். சாப்பிடும் பொருட்களில் உள்ள சத்துக்கள், நன்மைகள் போன்றவற்றை தான் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் பொருட்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது, எப்படி தயாரிக்க படுகிறது போன்ற விவரங்களை அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சுருள் பாசியை பற்றிய தகவலை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுருள் பாசி பற்றிய தகவல்:

Spirulina in Tamil

சுருள் பாசி ஒரு செல் புரத வகையை சார்ந்தது. இதில் பச்சையம் உள்ளது, அதனால் தான் பச்சை நிறத்தில் இருக்கிறது. இவை இந்திய, ஆப்பிரிக்கா, மெக்சிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளர கூடிய ஒரு பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. 

இதில் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதில் முக்கியமக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அதிக புரதமும் இருக்கின்றது. இது பல்வேறு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அளவிற்கு பெரும் ஆற்றல் கொண்டது.

Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே ஏற்ற உணவாக இருக்கிறது.

இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் முடி உதிர்வும் பிரச்சனையும் சரி செய்ய உதவுகிறது.

சுருள் பாசியில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால்  பொடி, மாத்திரை வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது. இதனை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

பால், முட்டை, பருப்பு போன்றவற்றில் இருக்கும் புரோட்டீனை விட சுருள் பாசியில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதனால் உடலில் புரோட்டீன் சதை அதிகரிக்கவும். முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement