உங்கள் வீட்டு பிரியாணியில் நட்சத்திர சோம்பை சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

நட்சத்திர சோம்பு | star anise in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நட்சத்திர சோம்பு பற்றிய நாம் அறிந்திடாத சில பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக நாம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில்  மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் நட்சத்திர சோம்புகள். இவற்றை நாம் மற்ற உணவுகளுக்கு அதிகமாக பயன்படுத்த மாட்டோம், ஆனால் இதை பிரியாணிக்கு மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துவோம் அல்லவா, னால் இது எங்கு அதிகமாக கிடைக்கிறது என்று யாருக்கும் தெரியாது, மேலும் நீங்கள் பிரியாணியில் நட்சத்திர சோம்பை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை பற்றிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

கடுகை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

Illicium Verum Plant in Tamil:

 illicium verum plant in tamil

Illicium Verum என்பது நட்சத்திர சோம்புகள் உருவாகும் செடியாகும். இந்த நட்சத்திர சோம்பு செடிகள் பொதுவாக “தென்கிழக்கு ஆசியாவில்” நடுத்தர பசுமை மரமாக இருக்கிறது.  இந்த மரத்தில் இருக்கும் கனி நட்சத்திர வடிவில் இருப்பதால் இவை நட்சத்திர சோம்புகள் என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு பலவிதமான பெயர்களும் உண்டு,   நட்சத்திர சோம்புகள், நட்சத்திர சீரகம், அன்னாசிப்பூ, யானைசீரகம், என்றும் அழைக்கப்படுகிறது.  இதனுடைய ஆங்கில பெயர்கள் ஸ்டார் அனா சீட், Star anise என்பதாகும்.  இதனுடைய தாவர பெயர் இலிசியம் வீரம் ஆகும்.  இவை மேக்னோலியா என்னும் குடும்பத்தை சேர்ந்தவையாகும்.

இந்த நட்சத்திர சோம்புகளானது பழுப்பதற்கு முன் அறுவடை செய்யப்படுகிறது. இவை அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நாடு சீனா, இந்தோசீனா போன்றவையாகும். இவை பெரும்பாலும் இந்தியாவில் விளைவதில்லை.

நட்சத்திர சோம்பு பயன்கள்:

 illicium verum in tamil

நட்சத்திர சோம்புகளானது பல மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அதிலும் இதை டச்சுக்காரர்கள் 1969 ஆம் ஆண்டில்  தேயிலையில் மனம் சேர்ப்பதற்காக நட்சத்திர சோம்புகளை பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதோடு மட்டுமின்றி இந்த நட்சத்திர சோம்புகளின் எண்ணெய்கள் ஆனது வாசனை திரவியங்கள், சருமத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சோப்புகள், மவுத்வாஷ்கள் போன்றவற்றிக்கு வாசனையை ஏற்படுத்துவதற்காக இந்த நட்சத்திர சோம்பின் எண்ணெய்கள்  பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

நட்சத்திர சோம்புகளில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.  அதாவது வைட்டமின் C, A மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் போதுமான அளவு நிறைந்துள்ளன. இவற்றை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆஸ்துமா, இருமல் போன்ற சளி பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நட்சத்திர  சோம்பினை நீரில் கொதிக்க வைத்து, அதனை குடிக்கும் பொழுது உடலில் ஏற்படும் வீக்கம், வாயு பிரச்சனை, மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், சளி  போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. 

கசகசாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com