வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Updated On: April 8, 2025 6:33 PM
Follow Us:
Stripes on India Currency Notes in Tamil Meaning
---Advertisement---
Advertisement

இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த கோடுகளை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம்

Stripes on India Currency Notes in Tamil Meaning:- இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவற்றுள் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் தேதி 2016-ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ₹500, ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.

உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10, ₹20,₹25, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹1000 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20-க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. சரி இந்த பதிவில் இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகள் காரணம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகள் – காரணம் என்ன தெரியுமா? – Stripes on India Currency Notes in Tamil Meaning

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள சாய்வாளனா கோடுகளை நீங்கள் பாத்திருக்கிறீர்கள்? ஒருவேளை இந்த கோடுகளை நீங்கள் பார்த்திருந்தால், வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்த கோடுகள் ‘பிளீட் மார்க்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோடுகள் பார்வையற்றோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை ஆகும். நோட்டில் உள்ள இந்த வரிகளை தொட்டு பார்த்தாலே அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்று சொல்லி விடலாம். அதனால் தான் 100, 200, 500 மற்றும் 2000 நோட்டுகளில் வெவ்வேறு எண்ணிக்கையிலான கோடுகள் இருக்கின்றன.

100 ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். அதைத் தொட்டால் அது 100 ரூபாய் நோட்டு என்பது பார்க்காமலேயே நமக்குப் புரியும். அதே நேரத்தில், 200 ரூபாய் நோட்டின் இருபுறமும் நான்கு முகடுகள் இருக்கும். அதோடு மேற்பரப்பில் இரண்டு பூஜ்ஜியங்களும் இடம்பெற்றிருக்கும்.

500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் இருபுறமும் 7-7 கோடுகளும் இருக்கும். இந்த கோடுகளின் உதவியுடன், பார்வையற்றவர்கள் இந்த நோட்டையும் அதன் மதிப்பையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.

பழைய நாணயங்கள் இன்றைய மதிப்பு 2022

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now