வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுற்றுச்சூழல் என்றால் என்ன தெரியுமா..?

Updated On: April 3, 2026 5:02 PM
Follow Us:
Sutru Sulal Enral Enna
---Advertisement---
Advertisement

Sutru Sulal Enral Enna

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது சுற்றுச்சூழல் என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே நம் சுற்றுசூழலை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாப்பு என்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். ஆனால் சுற்றுச்சூழல் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இப்பதிவின் வாயிலாக சுற்றுச்சூழல் என்றால் என்ன என்று படித்தறியலாம் வாங்க.

சுற்றுச்சூழல் நன்மைகள் தீமைகள்

சுற்றுச்சூழல் என்றால் என்ன: 

சுற்றுச்சூழல் என்றால் என்ன

சுற்றுச்சூழல் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அதாவது சுற்றுச்சூழல் என்பது மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது தான் இந்த பூமியாகும்.

அதாவது, மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்ற உயிரினங்கள் வாழும் அல்லது உயிர்வாழும் மற்றும் உயிரற்ற பொருட்கள் இருக்கும் சூழ்நிலைகள் அல்லது சுற்றுப்புறங்களின் தொகுப்பைக் குறிப்பது தான் சுற்றுச்சூழல்.

அதுபோல இது பிரஞ்சு வார்த்தையான “Environ” என்பதிலிருந்து உருவானது. இந்த Environ என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் “சுற்றும்” என்று பொருள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

அதுமட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் குறிக்கிறது. அதுபோல நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதங்களும் தான் சுற்றுச்சூழல் என்று கூறப்படுகிறது.

இந்த பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தும் சரியாக இல்லை என்றால் நம்மால் இந்த பூமியில் வாழவே முடியாது. அபப்டி இந்த நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைகளில் ஏதாவது பாதிப்பு என்றால் தான் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு என்றால் என்ன..? 

சுற்றுச்சூழல் என்றால் என்ன

சுற்று சூழல் மாசுபாடு என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதை குறிக்கிறது. அதாவது,

  • நிலம் மாசுபடுததல்
  • நீர் மாசுபடுதல்
  • காற்று மாசுபடுதல்
  • ஆகாயம் மாசுபடுதல்
  • நெருப்பு மாசுபடுதல்

என்று இப்படி பஞ்சபூதங்களும் மாசுபடுவதை தான் சுற்றுச்சூழல் மாசுபாடு என்று சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய கட்டுரை

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணம்:

நம் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால்,

  • தொழிற்சாலை கழிவுகள்
  • ரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
  • வாகனங்களின் இறைச்சல்
  • வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
  • மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
  • பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
  • மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
  • மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
  • இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு

இப்படி மனிதர்கள் செய்யும் தவறுகளால் தான் சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆகவே சுற்றுசூழலின் பாதுகாப்பு என்பது நம்மிடம் தான் உள்ளது. ஆகையால் சுற்றுசூழலை பாதுகாப்பது என்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now