இவரை தான் தாசில்தார் என்று சொல்கிறோமா..? | Tahsildar in Tamil

Advertisement

Tahsildar in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் தாசில்தார் என்றால் என்ன..? நாம் யாரை தாசில்தார் என்று சொல்கிறோம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே தாசில்தார் என்ற பெயரை அதிகம் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் Tahsildar in Tamil தாசில்தார் என்று நாம் யாரை அழைக்கிறோம் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக Tahsildar in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க..!

தமிழ்நாட்டில் தாசில்தார்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

தாசில்தார் என்றால் என்ன..? 

பொதுவாக தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்த படி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

ஆகவே இந்த வருவாய் வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். அப்படி இருக்கும் வட்டாட்சியர்களைத் தாசில்தார் என்றும் சொல்வார்கள்.

அதாவது, ஒரு தாலுகா அலுவலகத்தின் தலைவர் வட்டாட்சியர் அல்லது தாசில்தார் ஆவார். இவருக்கு தனி அலுவலகம் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.

ஆகவே வட்டாட்சியரை தான் தாசில்தார் என்று சொல்கிறோம்.

தாசில்தார் பணிகள் என்ன..?

ஒரு வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார். ஒரு தாசில்தார் ஒரு வரி அதிகாரி என்றும் அறியப்படுகிறார்.

அதாவது அவர் நில வருவாயை வசூலிப்பதற்கும் வருவாய் ஆய்வாளர்களுடன் ஒத்துழைப்பதற்கும் பொறுப்பானவர். ஆகவே நில வருவாயைப் பொறுத்தமட்டில் ஒரு தாலுக்காவிடம் இருந்து வரி வசூலிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவே, அவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு நிர்வாக நீதிபதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அதுபோல தாசில்தாரில் துணை வட்டாட்சியர், உதவி வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் என்று பல பிரிவுகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2024

Zonal Deputy Tahsildar in Tamil:

அதுபோல மண்டல துணை வட்டாட்சியர் என்ற ஒரு துறையும் இருக்கிறது. அதை தான் ஆங்கிலத்தில் Zonal Deputy Tahsildar என்று சொல்வார்கள். அதாவது, Zonal Deputy Tahsildar என்றால் மண்டல துணை வட்டாட்சியர் என்பதாகும்.

மண்டல துணை வட்டாட்சியர் என்பவர் ஒரு மாவட்டத்தின் வருவாய் வட்டத்தின் துணை வருவாய் வட்டங்களை நிர்வகிக்க, வட்டாட்சியரின் கீழ் செயல்படுபவர் ஆவார். மண்டல துணை வட்டாட்சியரின் கீழ் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுகிறார்கள். மேலும் இவருடைய வேலைகளை கீழே காண்போம்.

  • இந்த மண்டல துணை வட்டாட்சியரின் வேலை வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.
  • வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல் ஆகும்.
  • முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.
  • பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
    பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
  • கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.
  • மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
  • ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
  • வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
  • வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
  • பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.
  • நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.
  • குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.

தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement