வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

Updated On: December 20, 2023 12:08 PM
Follow Us:
Tamil Grammar
---Advertisement---
Advertisement

பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வினா விடை – Tamil Grammar

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னெவென்றால், பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் வினா விடைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

இதனை தெரிந்துகொள்வதன் மூலம் தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கணம் குறிப்பு வினாக்களுக்கு நாம் சரியாக பதில் எழுத முடியும். பொதுவாக இலக்கணத்தில் நிறைய விதிமுறைகள் உள்ளது. இருப்பினும் அதனை தெரிந்துகொண்டோம் என்றால் மிக எளிதாக நாம் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறமுடியும். சரி வாங்க தமிழ் இலக்கணம் குறித்த முழு தகவல்களை இப்பொழுது நாம பார்க்கலாம் வாங்க.

தொகைநிலைத் தொடர்:

இந்த தொகைநிலைத் தொடரில் ஆறு விதமான கேள்விகள் கேட்கப்படுகிறது. அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வேற்றுமைத் தொகை:

வேற்றுமைத் தொகை [ஐ, ஆல், கு, இன், அது, கண்] போன்ற எழுத்துக்கள் மறைந்து வரும்.

எடுத்துக்காட்டு:

  • கரும்பு தின்றான் = கரும்பை தின்றான் இவற்றில் ஐ என்ற எழுத்து மறைந்து வருகிறது.
  • சென்னை சென்றார் = சென்னைக்கு சென்றார் இவற்றில் கு என்ற எழுத்து மறைந்து வருகிறது.

ஆக வாக்கியத்தில் ஐ, ஆல், கு, இன், அது, கண் எழுத்துக்கள் மறைந்து வந்தால் அது பெருவேற்றுமை தொகை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பதினெண் மேற்கணக்கு நூல்கள்

உருபும் பயனும் உடன் தொக்க தொகை:

எடுத்துக்காட்டு:

  • தேர்ப்பாகன் = தேரை ஓட்டும் பாகன் – இவற்றில் ஐ என்ற எழுத்து மற்றும் ஓட்டும் என்ற வார்த்தை மறைந்து வருவதினால் இது உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகும்.
  • தமிழ்த்தொண்டு = தமிழுக்கு ஆற்றும் தொண்டு – இவற்றில் கு என்ற எழுத்து மற்றும் ஆற்றும் என்ற வார்த்தை மறைந்து வருவதினால் இது உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகும்.

வினை தொகை:

வினைத்தொகை பொறுத்தவரை முதலில் வரும் வார்த்தை வினை சொல்லாகவும், அடுத்து வரும் வார்த்தை பெயர் சொல்லாகவும் இருப்பது வினைத்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • வீசுதென்றல் = வீசு என்பது வினைச்சொல், தென்றல் என்பது பெயர்ச்சொல்.

ஆக இவற்றில் காலத்தை கணக்கிட முடியாது, அதாவது வீசுதென்றல் என்பது வீசியதென்றால்லாக இருக்கலாம், வீசுகின்ற தென்றலாக இருக்கலாம், வீசும் தென்றலாக இருக்கலாம், ஆக இவற்றில் காலத்தை கணக்கிட முடியாது என்பதனால் இதற்கு வினைத்தொகை என்று அழைக்கப்படுகிறது.

பண்புத்தொகை:

பண்புத்தொகை என்பது ஒரு விஷயம் எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் ஒன்றாகும். அதேபோல் நிறம், வடிவம், சுவை, அளவு இவை எல்லாம் வெளிப்படையாக வந்தாலும் அது பண்புத்தொகை ஆகும்,

எடுத்துக்காட்டு:

  • செங்காந்தள் = செம்மை + காந்தல்
  • வட்டத் தொட்டி = வட்டமான + தொட்டி
  • இன்மொழி = இன்மை + மொழி

இவற்றின் இன்னொரு சிறப்பு இருபெயரொட்டு பண்புத்தொகை

மார்கழித் திங்கள் – இவற்றில் மார்கழி எனபதும் மாதத்தை குறிக்கிறது அதேபோல் திங்கள் என்பதும் மாதத்தை தான் குறிக்கிறது.

ஆக இவற்றில் சிறப்பு பெயரும், பொது பெயரும் சேர்ந்து வருவதினால் இருபெயரொட்டு பண்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது.

உவமைத் தொகை:

பொதுவாக உவமை தொகையில் போன்ற என்ற வார்த்தை அதாவது உவமேயம் மறைந்து வந்தால் அது உவமை தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • மலர்கை – மலர் போன்ற கை

உம்மைத் தொகை:

ஒரு வாக்கியத்தில் உம் என்ற வார்த்தை மறைந்து வந்தால் அது உம்மை தொகை ஆகும்.

எடுத்துக்காட்டு:

  • அண்ணன் தம்பி – அண்ணனும் தம்பியும்
  • தாய்சேய் – தாயும் சேயும்

அதுவே அண்ணனும் தம்பியும் என்று நேரடியாகவே வாக்கியம் வந்துவிட்டது என்றால் அது உம்மைத் தொகையில் வராது அது எண்ணும்மை ஆகும் அது தொடர் நிலை கிடையாது.

அன்மொழித் தொகை:

  • சிவப்புச் சட்டை பேசினார் = இவற்றில் சிவப்பு சட்டை பேசாது, சிவப்பு சட்டை அணிந்திருந்த ஒருவர் பேசினர் என்பது தான் பொருள்.
  • முறுக்கு மீசை வந்தார் = இவற்றில் மீசை என்பது வராது, முறுக்கு மீசை வைத்திருந்த ஒருவர் வந்தார் என்பது தான் பொருள்.

ஆக ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தையே ஒளிந்திருந்தால் அது அன்மொழித் தொகை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now