தமிழ் புதிர்கள் மூளைக்கு வேலை | Tamil Puzzles With Answers

Advertisement

Tamil Puzzles With Answers

பொதுவாக  புதிர் என்பது மறைமுகமாக மற்றும் விவரிக்க முடியாத அளவிற்கு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விளையாட்டு ஆகும். இதனை புதிர்கள் என்றும்,  விடுகதைகள் என்று அழைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த விளையாட்டு ஆகும். ஒருவரது யோசிக்கும் திறனையும், அறிவு திறனையும் மேற்படுத்த உதவும் விளையாட்டாகும். சரி இந்த பதிவில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் தமிழ் புதிர்கள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

தமிழ் புதிர்கள் மூளைக்கு வேலை

1. ஒரு பெரிய கனரக வாகனம் ஒரு பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. எவ்வளது முயற்சி செய்தும் அந்த வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை அப்போது வயதான ஒருவர் உதவிக்கு வந்தார், அவர் சொன்ன யோசனைப்படி செய்தவுடன் வண்டி பாலத்தின் அடியில் இருந்து வெளியே வந்துவிட்டது, அப்படி அவர் என்ன யோசனை சொல்லிருப்பார்?

விடை: அவர் வாகனத்தின் டயர்களில் இருக்கும் காற்றை பிடுங்க சொன்னார். காற்றை பிடிங்கியவுடன் வண்டியின் உயரம் குறைந்தது. வாகனமும் வெளியே வந்தது.

2. இது தேவைப்படும்போது தூக்கி எறியப்படும், ஆனால் தேவையில்லாத போது பத்திரபடுத்தி வைக்கப்படும். அது என்ன?

விடை: நங்கூரம் 

3. ப்ரஜன் ஒரு விழாவிற்கு சென்றான், அங்கிருந்த ஒரு கடையில் நான் ஒருவரின் ‘மிக சரியான எடை’யை ஒரு பேப்பரில் எழுதி தருவேன், நான் சரியாக எழுதிவிட்டால் அவர் எமக்கு 1000 ரூபாய் தரவேண்டும். தவறாக எழுதிவிட்டால் நான் அவருக்கு 2000 தருவேன் என்றார். ப்ரஜன் சுற்றும் முற்றும் பார்த்தான் அங்கே எந்த ஒரு எடை போடும் இயந்திரமும் இல்லை இதனால் அவன் போட்டிக்கு ஒப்புக்கொண்டான். போட்டியில் அந்த நபர் பிரஜனின் எடையை எழுதவில்லை ஆனாலும் ப்ரஜன் அந்த கடைக்காரனிடம் 1000 ரூபாய் கொடுத்தான் அது ஏன்?

விடை: அவர் சொன்னது “மிக சரியான எடை” என்ற வார்த்தைதான். ஆகவே அவர் சொன்னது போல பேப்பரில் மிக சரியான எடை என்ற வார்த்தையை எழுதி பிரஜனிடம் இருந்து 1000 ரூபாயை வாங்கி கொண்டார்.

4. ஒரு பேருந்தில் 25 வயதுள்ள கர்ப்பிணி பெண், 30 வயது போலீஸ்காரர், 50 வயது ஆண், 60 வயது பேருந்து ஓட்டுநர் உள்ளனர். இவர்களில் யார் வயது குறைந்தவர்?

விடை: கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தான் வயது குறைவு.

5. மின்சாரத்தில் இயங்கும் ரயில் ஒன்று 100 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு திசை நோக்கி பயணிக்கிறது. அந்த நேரத்தில் காற்று வடக்கில் இருந்து வீசினால் புகை எந்த திசை நோக்கி செல்லும்?

விடை: மின்சாரத்தில் இயங்கும் ரயிலில் புகை வராது.

மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
குழந்தைகளுக்கான விடுகதைகள்
விடுகதை விளையாட்டு விடைகள்
கணக்கு விடுகதைகள்
விடுகதைகள் | Vidukathaigal

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement