சங்க இலக்கிய பெயர்கள்
இலக்கியமும், இலக்கணமும் கொண்டு காலத்தை வென்று பல்வேறு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் இனிமை குறையாமல் கற்போர் நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருந்தமிழ் சிறப்பினை வார்த்தைகளால் சொல்ல இயலாது. செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. கால மாற்றத்திற்கேற்ப புத்தம் புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மறையும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து தமிழ் மொழி வளர்ந்து நிற்கின்றது. ஆனால் நாம் இன்று அதிகம் பயன்படுத்துவது ஆங்கில மொழிகளை தான். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் இணையான தமிழ் சொல் உண்டு. அந்த வகையில் இன்று வணிகத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான சங்க இலக்கிய சொற்களை பார்க்கபோகிறோம்.
வணிகத்தில் பயன்படுத்தும் சங்க இலக்கிய பெயர்கள்:
வ.எண் |
|
|
1 |
Traders |
வணிக மையம் |
2 |
Corporation |
நிறுவனம் |
3 |
Agency |
முகவாண்மை |
4 |
Center |
மையம், நிலையம் |
5 |
Emporium |
விற்பனையகம் |
6 |
stores |
பண்டகசாலை |
7 |
Shop |
கடை, அங்காடி |
8 |
Show Room |
காட்சியகம், எழிலங்காடி |
9 |
General Stores |
பல்பொருள் அங்காடி |
10 |
Travel Agency |
சுற்றுலா முகவாண்மையகம் |
11 |
Travels |
போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம் |
12 |
Electricals |
மின்பொருள் பண்டகசாலை |
13 |
Repairing centre |
சீர்செய் நிலையம் |
14 |
work shop |
பட்டறை, பணிமனை |
15 |
Jewellers |
நகை மாளிகை, நகையகம் |
16 |
Timbers |
மரக்கடை |
17 |
Printers |
அச்சகம் |
18 |
Power Printers |
மின் அச்சகம் |
19 |
Offset printers |
மறுதோன்றி அச்சகம் |
20 |
Lithos |
வண்ண அச்சகம் |
Tamil sanga ilakkiyam names for business:
21 |
Cool drinks |
குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் |
22 |
Sweet Stall |
இனிப்பகம் |
23 |
Coffee Bar |
குளம்பிக் கடை |
24 |
Hotel |
உணவகம் |
25 |
Taylor’s |
தையலகம் |
26 |
Textiles |
துணியகம் |
27 |
Ready made clothing |
ஆயத்த ஆடையகம் |
28 |
Cinema Theater |
திரையகம் |
29 |
Video Center |
ஒளிநாடா மையம், விற்பனையகம் |
30 |
Photo Studio |
புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |