மாணவர்களுக்கான விடுகதைகள்…….

Advertisement

மாணவர்களுக்கான விடுகதை 

விடுகதைகள் பல செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை சென்றடைந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை. கிராமங்களில் விடுகதை என்பது மிக சிறந்த ஒரு பொழுது போக்காக இருக்கும். பிறர் சிறப்பாக சிந்திக்கும் வகையில் ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனி பெருமை தான். தமிழ் விடுகதைகள் பல, காலம் காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருந்தாலும் புதியதாக பல விடுகதைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக சிறு விடுகதைகள் இதோ உங்களுக்காக….

சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்

 

விடுகதை With Answer in Tamil:

  1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடை: தேள்

2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

விடை: தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

விடை: வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

விடை: கரும்பு

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

விடை: விழுது

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

விடை: பட்டாசு

7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

விடை: மூச்சு

8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?

விடை: பூரி

9 கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

விடை: காகம்

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

விடை: வெண்டைக்காய்

11. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

விடை: கண்

12. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?

விடை: ஆமை

13. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

விடை: முட்டை

14. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

விடை: அடுப்புக்கரி

15. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

விடை: பெயர்

16.யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

விடை: இமை

17. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

விடை: சிரிப்பு

18. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?

விடை: நாய்

19. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

விடை: வாழை

20. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

விடை: சோளம் 

21. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?

விடை:  பணம்

22. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. அவர் யார் ?

விடை:  கொசு

23. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

விடை: பூசணிக்கொடி

24. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

விடை: குடை

25. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

விடை:  தொலைபேசி

26. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

விடை: தேங்காய்

27. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

விடை:  மீன் வலை

28. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?

விடை:  பட்டாசு

29. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

விடை: பாய்

30. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

விடை: சிலந்தி வலை

நகைச்சுவை விடுகதைகள்
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement