15 சுவாரசியமான தமிழ் விடுகதைகள் | Tamil Vidukathaigal

Advertisement

Tamil Vidukathaigal

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது சுவாரசியமான 15 விடுகதைகளை பற்றி தான். விடுகதை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிறர் கேட்கும் விடுகதைக்கு விடை என்ன என்று தெரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். இது போன்ற விளையாட்டுகள் நமது அறிவு திறனை மேம்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது சுவாரசியமான 15 விடுகதைகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

15 சுவாரசியமான தமிழ் விடுகதைகள்:

1 அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்?

விடை: பறை

2 உடல் முழுவதும் ஓட்டைகளை கொண்டவன் ஆனாலும் தண்ணீரை சேர்த்து வைப்பான் அவன் யார்?

விடை: ஸ்பான்ச் 

3 நாம் சாப்பிடுவதற்க்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை சாப்பிட முடியாது அது என்ன?

விடை: தட்டு

4 எட்டுக் கை குள்ளனுக்கு ஒற்றை கால் அவன் யார்?

விடை: குடை

5 பகலிலே நீல நிற சாலை இரவிலே மஞ்சள் நிற சோலை அது என்ன?

விடை: வானம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நகைச்சுவை விடுகதைகள்

6 ஒல்லி உடம்புக்காரன் ஊரை எரிக்கும் குசும்புக்காரன் அவன் யார்?

விடை: தீக்குச்சி

7 அவன் அழுகையில் ஒளிந்திருக்கும் வெளிச்சம் அவன் யார்?

விலை: மெழுகுவர்த்தி 

8 கண்ணில் தென்படும் அவனை கையில் பிடிக்க முடியாது அவன் யார்?

விடை: புகை

10 நீங்கு எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான் அவன் யார்?

விடை: நிழல்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மொக்கையான தமிழ் விடுகதைகள்..!

11 எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?

விடை: மின்விசிறி 

12 பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது அது என்ன?

விடை: தேங்காய்

13 கரைந்து போகும் வெள்ளி தட்டு அது என்ன?

விடை: தேய்பிறை 

14 காலில்லாமல் ஓடுவான் அவன் யார்?

விடை: பாம்பு 

15 முள் இருந்தும் குத்தாதவன் அவன் யார்? 

விடை: கடிகாரம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement